PDA

View Full Version : கற்பு

rajapandian21
09-10-2013, 07:48 AM
கற்பு கற்பு என்று
பலர் கதைக்கின்றனர்
எவரேனும் கண்டதுண்டா
கடவுளையும் தான் யாரும்
கண்டதில்லை - ஆயினும்
சிலை உண்டன்றோ
உடலால் காயமடைந்தவளை
தேனுடன் தேனீயும் சொட்டும்
விசச் சொற்களால்
விடாது கொட்டும் வீரர்களே
உங்களிடம் ஓர் வினா
மணமாகா பெண்
உறவு கொண்டாள்
போய்விடும் கற்பு
மணமான பின்
உறவு கொண்டாள்
போகாதோ?

M.Jagadeesan
10-10-2013, 01:17 PM
கற்பு என்பது நம்பிக்கை.

கணவன் மனைவியிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
தந்தை மகளிடத்தில்வைக்கும் நம்பிக்கை கற்பு.
தாய் மகனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
நண்பன் தன் நண்பனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
காதலன் காதலியிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
காதலி காதலனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
தொண்டர்கள் தலைவனிடத்தில் வைக்கும் நம்பிக்கை கற்பு.
அரசன் மக்களிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.
மக்கள் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை கற்பு.

இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்…

மும்பை நாதன்
10-10-2013, 03:48 PM

உடல் சார்ந்தது அல்ல
உண்மையில் மனம் சார்ந்ததே கற்பு
நயத்துடன் கவிதையில் நல்லுரை
நவின்ற ஜெகதீசனுக்கு நன்றி !