PDA

View Full Version : வளர் பிறையும் தேய்பிறையும்



மும்பை நாதன்
13-10-2013, 05:52 PM
வானத்தின் ஒற்றைக்கண்ணோ நீ ?
இருந்தாலும் மிகவும் சோம்பேறித்தனமான அசைவுதான் உனக்கு !
உந்தன் இமையை திறக்க பதினைந்து நாள்;
திறந்த இமையை மூட பதினைந்து நாள்
முழுதாய் இமைகள் மூடிய தினம் அமாவாசை !
முழுதாய் இமைகள் திறந்த தினம் பவுர்ணமி !
மெல்ல மெல்ல இமைகள் மூடுவதும் திறப்பதும்
தேய்பிறையும் வளர் பிறையுமாய் காட்சி தருகிறதோ ?