PDA

View Full Version : வசை



rajapandian21
17-11-2013, 11:55 AM
சிறு வயதிலே பெற்றோர் திட்ட
முகம் வாடி அழுதேன்
விடலை பருவத்திலோ பெற்றோர் திட்ட
முதுமை வந்ததால் மூலையில் கிட என்றேன்
என் நண்பர் திட்ட அவரிடம்
மௌன விரதம் கொண்டேன்
என் மேலதிகாரி திட்ட
காட்டினேன் என் கீழிருப்போரிடம்
திருமணமாகி மனைவி திட்ட
ஆதிக்கத்தை காட்டுவர் பலர்
பெண்ணே காத்திருக்கிறேன்
உன் வசை பாடலுக்காக
தவம் புரிகிறேன் என்
குழந்தையின் தவழும் வசை மொழிக்காக

மும்பை நாதன்
17-11-2013, 04:25 PM
வசைச்சுழல் என்பது இதுதானோ ?