PDA

View Full Version : தொடர்வண்டி



rajapandian21
02-12-2013, 05:12 PM
உயரம் என்றாலோ
நீர் என்றாலோ
குகை என்றாலோ
உனக்கு பயமோ
அதனால் தான்
மிகுந்த சத்தமாகவும்
மிகுந்த கவனமாகவும்
மெல்லச் செல்கிறாயோ
அதுவும் நல்லதுதான்
உயரம் கண்டதும்
சத்தம் மிகுதியால்
கீழே விழுந்து
உடைந்தோர் பலர்
நீரை கண்டதும்
நிதானம் இழந்து
மாண்டோரும் பலர்
தொடரட்டும் உன்
நிதானமான மக்கள்
சேவைப் பயணம்
நீண்ட தொடர்வண்டியே

கீதம்
03-12-2013, 03:24 AM
பாரத்தோடு பந்தங்களை
பத்திரமாய் இழுத்துப்போகும்
கூடுதல் பொறுப்புடைய
குடும்பத்தலைவன் நான்!
வேகம் குறைக்குமிடம் குறைத்து
கூட்டுமிடம் கூட்டி
விழிப்பாய்க் கடப்பேன்
விரைவுரயிலானபோதும் !

தொடர்வண்டிச்சேவை தொடர்ந்திட வாழ்த்தும் கவி நன்று. பாராட்டுகள்.