PDA

View Full Version : ஏதோ தோன்றியது



சிவா.ஜி
28-11-2013, 06:21 PM
எழுதத்தெரியுமென்பதால்
ஏதோ பிதற்றிய வரிகள்
கவிதைகளாய் களம் புகுந்தன
கவிதையறியா ”கவி”களை
நந்தவனம் புகச்செய்தால்...
கவிமரங்கள் காயப்படாதோ
இப்படிக் குப்பையைக் குவிப்போரே
மன்றத்துக்கு வேண்டுமெனில்
ஆயிரம் கிட்டுவோர்....ஆயின்
பாயிரம் கிட்டுமோ.....!!!
மன்றம் தனதறம் எட்டுமோ...!!

கீதம்
28-11-2013, 08:40 PM
எழுதத்தெரியுமென்பதால்
ஏதோ பிதற்றிய வரிகள்
கவிதைகளாய் களம் புகுந்தன
கவிதையறியா ”கவி”களை
நந்தவனம் புகச்செய்தால்...
கவிமரங்கள் காயப்படாதோ
இப்படிக் குப்பையைக் குவிப்போரே
மன்றத்துக்கு வேண்டுமெனில்
ஆயிரம் கிட்டுவோர்....ஆயின்
பாயிரம் கிட்டுமோ.....!!!
மன்றம் தனதறம் எட்டுமோ...!!

மன்றப்பலகையில் எழுதிப்பார்க்க
மகிழ்வோடு வருகின்றன பலவரிகள்…
வாசிப்போரும் வகைப்படுத்துவோருமின்றி
திண்டாடிக்கிடக்கின்றன சிலவரிகள்…
முறைப்படுத்தவும் குறைகளையவும்
மூத்தோரை எதிர்பார்த்துக்கிடக்குமவற்றைக்
குப்பையென்று தள்ளிவிடுதல் நன்றோ
குப்பையிலும் கோமேதகம் கிட்டலாமன்றோ….
மன்றப்பள்ளியின் மாணாக்கர்நாம் மனம்வைத்தால்
மன்றினறம் மேலும் உயருமே அண்ணா….

ஜானகி
29-11-2013, 02:54 AM
'கவிகள்' சிதறிய குப்பைகள், பிதற்றிய வரிகள் இருப்பதால் தான், 'பாயிரங்கள்' வைரமாய் ஜொலிக்கின்றன !

எதையும் தாங்கும் இதயம் உண்டு மன்றத்திற்கு....கவலை வேண்டாம்...நம் கைவரிசையைக் காட்டலாம்...தொடர்ந்து...!

M.Jagadeesan
29-11-2013, 03:20 AM
சப்பைகளும் சவலைகளும் முறையான பயிற்சியால்
...சரியாக நடப்பதற்கு அறிவியல் கண்டோம்
தொப்பைகளைக் கரைப்பதற்கும் மருத்துவம் கண்டோம்
...தொழுநோயை வெல்வதற்கும் தெரிந்து கொண்டோம்
குப்பைகளில் மின்சாரம் எடுக்கக் கண்டோம்
...குறைஎன்று எதையுமே தள்ளிட வேண்டாம்
தப்புகள் தவறுகள் செய்த பின்னர்தான்
...காளிதாச மாக்கவிஞன் பிறக்கக் கண்டோம்.

அமரன்
29-11-2013, 05:43 AM
வரிசை கட்டும் கவிகள் - மன்றம்
வாரிசை கண்ட மகிழ்வில்

நடை இனி உயரும் பாரீர்.

veruppuvijay
30-11-2013, 05:57 AM
ஒரு கவிதை எழுத, மற்றவர் பின் கவிதை எழுத.. அதைத்தொடர்ந்து இன்னொருவர் பாவொன்று எழுத.. அழகு அழகு.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.