PDA

View Full Version : விஷ விருட்சம்



கீதம்
23-11-2013, 11:21 PM
என் நண்பனிடம் கோபம் கொண்டிருந்தேன்
என் சினத்தை வெளிப்படுத்தினேன்,
வன்மம் மறைந்தொழிந்தது.

என் எதிரியிடம் கோபம் கொண்டிருந்தேன்.
என் சினத்தை மறைத்தேன்.
வன்மம் வித்திட்டு வளர்ந்தது.

கலவரத்தோடு அதன் வேருக்கு
காலையும் மாலையும் கண்ணீரை வார்த்திருந்தேன்.
கபடப் புன்னகைகளாலும் வஞ்சகத் தந்திரங்களாலும்
அதற்கு வெம்மையூட்டியிருந்தேன்.

பகலிரவாய்ப் பாடுபட்டு வளர்த்த மரத்தில்
பக்குவமாய்க் காய்த்ததொரு ஆப்பிள்.
பளபளக்கும் அதனைக் கண்ணுற்றான் என் எதிரி.
பழம் எனக்குரியது என்றறிந்தபின்னரும்
காரிருள் கவிழ்ந்திருந்த இரவொன்றில்
களவாடிட நுழைந்தான் என் தோட்டத்துள்.

காலையில் பார்த்துக் களிப்புற்றேன்,
விருட்சத்தின் அடியில்
விறைத்துக்கிடந்த என் எதிரியை!

(மூலம்: William Blake எழுதிய ‘A Poison Tree’ என்னும் ஆங்கிலக்கவிதை. மூலக்கவிதை கீழே)

A Poison Tree

I was angry with my friend;
I told my wrath, my wrath did end.
I was angry with my foe:
I told it not, my wrath did grow.

And I waterd it in fears,
Night & morning with my tears:
And I sunned it with smiles,
And with soft deceitful wiles.

And it grew both day and night,
Till it bore an apple bright.
And my foe beheld it shine,
And he knew that it was mine.

And into my garden stole.
When the night had veiled the pole;
In the morning glad I see,
My foe outstretchd beneath the tree.

M.Jagadeesan
24-11-2013, 02:15 AM
மூலத்திற்கு சற்றும் குறையாத அருமையான மொழிபெயர்ப்பு!

வாழ்த்துக்கள் கீதம்!

சினம் என்னும் மரத்தில் காய்த்த ஆப்பிளை சாப்பிட்டதால் எதிரி செத்தொழிந்தான். சினத்தை காட்டினால் அது மறையும்; காட்டாமல் மறைத்தாலோ அது வளரும் என்பது கவிதையின் கரு.

ஆனால் நம் வள்ளுவரோ, சினமானது கொண்டவனையே அழிக்கும் என்று குறிப்பிடுகிறார். " சேர்ந்தாரைக் கொல்லி " என்று சினத்திற்குப் பெயர் சூட்டுகின்றார்.

கீதம் அவர்களுக்கு ஒரு கேள்வி.

கீதம் அவர்கள் முன்போல
......மன்றம் ஏனோ வருவதில்லை.
மாதம் ஒருமுறை வருவதென
......மனதில் திட்டம் கொண்டீரோ?
போதும் நமது தமிழ்த்தொண்டு
......போவோம் என்று நினைத்தீரோ?
ஆதவன் இன்றி இவ்வுலகு
......அசையா தென்பதை அறியீரோ?

ஜான்
24-11-2013, 06:41 AM
அருமை!!!
வெளிப்படுத்தப்படும் எத்தகைய வெறுப்புணர்வும் வீரியம் இழந்துவிடும்
அருமையான உளவியல் கவிதை!!

கீதம்
24-11-2013, 09:15 PM
மூலத்திற்கு சற்றும் குறையாத அருமையான மொழிபெயர்ப்பு!

வாழ்த்துக்கள் கீதம்!

சினம் என்னும் மரத்தில் காய்த்த ஆப்பிளை சாப்பிட்டதால் எதிரி செத்தொழிந்தான். சினத்தை காட்டினால் அது மறையும்; காட்டாமல் மறைத்தாலோ அது வளரும் என்பது கவிதையின் கரு.

ஆனால் நம் வள்ளுவரோ, சினமானது கொண்டவனையே அழிக்கும் என்று குறிப்பிடுகிறார். " சேர்ந்தாரைக் கொல்லி " என்று சினத்திற்குப் பெயர் சூட்டுகின்றார்.

கவிதையை ரசித்தளித்தப் பின்னூட்டத்துக்கும் தகுந்த குறள் மேற்கோளுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

பிணக்கு சிறிதாயிருக்கும்போதே அதை வெளிப்படப் பேசித்தீர்த்து இணக்கமாகிவிடுதல் வேண்டும்.

இல்லாவிடில் அது கொலைப்பாதகத்துக்கும் வழிவகுத்துவிடும் என்கிறார் போலும் இக்கவிஞர்.


கீதம் அவர்களுக்கு ஒரு கேள்வி.

கீதம் அவர்கள் முன்போல
......மன்றம் ஏனோ வருவதில்லை.
மாதம் ஒருமுறை வருவதென
......மனதில் திட்டம் கொண்டீரோ?
போதும் நமது தமிழ்த்தொண்டு
......போவோம் என்று நினைத்தீரோ?
ஆதவன் இன்றி இவ்வுலகு
......அசையா தென்பதை அறியீரோ?

வேலைப்பளுவாலும் இணையப் பிரச்சனையாலும் என் வருகையில் அடிக்கடி தடங்கல் நேர்கிறது. முடியும்போதெல்லாம் வந்து வாசித்துக் கருத்திடுவேன்.

தாங்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும் நன்மதிப்புக்கும் மனம் நிறைந்த நன்றி.

கீதம்
24-11-2013, 09:16 PM
அருமை!!!
வெளிப்படுத்தப்படும் எத்தகைய வெறுப்புணர்வும் வீரியம் இழந்துவிடும்
அருமையான உளவியல் கவிதை!!

ஊக்கம் தரும் நேர்த்தியானப் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி ஜான்.