PDA

View Full Version : வந்ததா சுதந்திரம்?



M.Jagadeesan
23-11-2013, 01:14 PM
பகைவென்று வெள்ளைப் பரங்கியனைச் சீமைக்கு
......அனுப்பியும் வரவில்லை நமக்குச் சுதந்திரம்
நகையணிந்த பெண்ணொருத்தி நடுநிசியில் காப்பாக
......நடந்தே செல்லுகின்ற நிலையிங்கு வந்திடுமா?
புகைப்பனியால் சூழ்ந்ததிரு பெங்களூரு மாநகரில்
......பெண்ணொருத்தி ஏடிஎம் சென்டரில் திருடனிடம்
வகையாக மாட்டியே தாக்குண்ட சம்பவம்
......வந்ததா சுதந்திரம் எனக்கேட்கத் தூண்டிடுமே!

கீதம்
23-11-2013, 10:53 PM
உண்மைதான் ஐயா. மனம் கொந்தளிக்கச்செய்யும் நிகழ்வு அது. இந்நிலை என்றுதான் மாறக்கூடும்? விடையறியா வினாக்களின் வரிசையில் இதுவுமொன்று.

செய்திச்சோலையிலும் கவிமனக்கச்செய்யும் தங்கள் கவித்திறனைப் பாராட்டுவதா? பாட்டுநிலவரத்தால் காட்டிய நாட்டுநிலவரத்தை எண்ணி நோவதா? புரியவில்லை.

Mano60
17-11-2016, 06:49 AM
துள்ளித்திரியும் பாலகர்க்கு அவர்படிக்கும்
பள்ளிதனில் நீதியும் நேர்மையும் பாடங்களாய்
அள்ளித்தரும் காலம் வரவேண்டும் வந்துவிட்டால்
கள்ளம் தரும் சிந்தனையும் ஓரளவு சென்றிடுமே மனதைவிட்டு.