PDA

View Full Version : சொத்து !



vasikaran.g
23-11-2013, 12:44 PM
சொத்து !
இதன் மேல் பலருக்கு பித்து !
சேர்த்தவன் போய் சேர்ந்தபிறகு
பிரிப்பது உறவை மட்டுமல்ல !
உயிரையும் தான் !

சொத்து ! கெட்டுப் போன
இதன் மேல் கெட்டுப் போகும்
உடலுக்கும் அதனைவிட்டுப்போகும்
உயிருக்கும் என்ன
அத்தனை ,மோகம் ?

பழம் கெட்டுப் போனால்
சொத்து என்று ஒதுக்குகிறோம் !
பருப்பு கெட்டுப் போனால்
சொத்து என்று ஒதுக்குகிறோம் !
பணம் நமை தொட்டு நின்றால்
சொத்து என்று விலக்குவதில்லை !
தனம் என்று விளக்குகின்றோம் !

என்ன மனமடா ?இது மடமடா ?
இனியேனும் சொத்தை சுற்றி
சொத்தைப் போவதை நிறுத்து !
ஆன்மாவை அதிலிருந்து
அரைமைல் தூரத்தில் நிறுத்து !
நிலையானதை நினைத்து
நிலையற்றதை துரத்து !

கீதம்
23-11-2013, 11:57 PM
இனியேனும் சொத்தை சுற்றி
சொத்தைப் போவதை நிறுத்து !
ஆன்மாவை அதிலிருந்து
அரைமைல் தூரத்தில் நிறுத்து !
நிலையானதை நினைத்து
நிலையற்றதை துரத்து !

நறுக்குத் தெறித்தாற்போன்ற நயமிகு வரிகள். வாழ்க்கையின் ஆதாரம் எங்கிருக்கிறது என்பதை அறியாதோர் செய்யும் தவற்றினை அழகாக விளக்கிய வரிகள். பாராட்டுகள்.



பழம் கெட்டுப் போனால்
சொத்து என்று ஒதுக்குகிறோம் !
பருப்பு கெட்டுப் போனால்
சொத்து என்று ஒதுக்குகிறோம் !


மேற்கண்ட வரிகளில் சிறு சந்தேகம். பழம் கெட்டுப்போனால் 'சொத்தை' என்றுதானே சொல்வோம். சொத்து என்றாலும் சொத்தை என்றாலும் ஒரே பொருள்தானா? விளக்கவேண்டுகிறேன். நன்றி தங்களுக்கு.

M.Jagadeesan
24-11-2013, 02:49 AM
ஆமாம். கீதம் அவர்களுக்கு வந்த ஐயம் எனக்கும் வந்தது. " சொத்து " என்ற சொல் " சொத்தையைக் " குறிக்குமா?

vasikaran.g
02-12-2013, 01:16 PM
நன்றி கீதம் அவர்களே , ஜெகதீசன் அவர்களே ...
சொத்தை என்ற பதம் தான் சரியான பொருள் தருவது .. சொத்து என்பது முதற்கண் பொருளைத்தான் குறிக்கும் . சொத்தை என்றுதான் எழுத எண்ணினேன் .வடதமிழகத்தின் விவசாய மக்கள் (குறிப்பாக விழுப்புரம் ,கடலூர் ,அரியலூர் பகுதிமக்கள் ) கெட்டுப்போன பழம் மற்றும் பருப்பு வகைகளை சொத்து (கெட்டுப்போனது என்ற பொருளில் ) பேச்சுவாக்கில் பயன்படுத்துவர் . எனவே அதை அப்படியே பயன்படுத்த விழைந்தேன் .

எனக்கு தெரிந்தவரை சொத்தை என்ற பதமே

vasikaran.g
02-12-2013, 01:17 PM
சரியானது .

உங்கள் கருத்துரைக்கு நன்றி