PDA

View Full Version : காதல் இன்பம்.



M.Jagadeesan
23-11-2013, 08:48 AM
கறந்த பாலை சுண்டக் காய்ச்சி
......கரும்புப் பாகும் தேனும் பருப்பும்
சிறந்த பாதாம் பருப்பை அத்துடன்
......சிறுக நறுக்கி மெல்லச் சேர்த்து
திறந்த ரோஜா மலரின் இதழை
......திருகிப் போட்டுக் கலக்கிக் குடித்தால்
பிறக்கும் இன்பம் எல்லாம் மங்கையின்
......பிட்டுக் கன்னம் தொடுவதற் கீடோ?

கீதம்
23-11-2013, 11:18 PM
ஆஹா... அருமையான கவிப்பானகம். ரசித்து ருசித்தேன். பாராட்டுகள் ஐயா.

வயதும் இளமையும் இருக்கும் காலத்தில்தான் இது சாத்தியம். சர்க்கரையும் கொழுப்பும் முட்டிமோதிக்கிடக்கும் முதுமையில் பாகும் பருப்பும் பக்கத்தில் வரமுடியுமா?

இளமையின் போதோ... அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு? என்று பாடுகிறாரே இன்னொரு கவிஞர்!

M.Jagadeesan
05-08-2014, 03:01 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி !

அனுராகவன்
11-08-2014, 04:27 PM
அருமையான கவி...பாராட்டுக்கள்...

M.Jagadeesan
11-08-2014, 04:40 PM
நன்றி அச்சலா !