PDA

View Full Version : சந்தை மனிதர்கள்



M.Jagadeesan
23-11-2013, 02:53 AM
கண்கள் பெரிதானால் முட்டைக்கண் என்பார்கள்
மண்பார்த்து நடந்தால் கோழை என்பார்கள்
மூக்கு பெரிதானால் குடைமிளகாய் என்பார்கள்
நாக்கு பெரிதானால் வாயாடி என்பார்கள்
கறுப்பு நிறமென்றால் கருப்பாயி என்பார்கள்
மறுத்துப் பேசினால் திமிர்பிடித்தவள் என்பார்கள்
படிப்பு அதிகமெனில் கர்வி என்பார்கள்
படிப்பு இல்லையெனில் கைநாட்டு என்பார்கள்
குள்ளமாய் இருந்தாலோ " குள்ளி " என்பார்கள்
மெல்ல நடந்தாலோ " நொண்டி " என்பார்கள்
இந்தக் குறையெல்லாம் திருமணச் சந்தையிலே
வந்தவழி போகுமடா கோடிகள் கொடுத்தாலே!

கீதம்
23-11-2013, 11:33 PM
தாயோ தமக்கையோ தமக்குப் பிறக்கும் மகளோ.... உருவம் எப்படியிருப்பினும் உறவால் அவரை மனத்தால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளும் மனம், துணை தேடும்போது மட்டும் துடிப்பாய் இன்னின்ன இப்படியிப்படி இருந்திடல்வேண்டுமென்று பட்டியலிட்டுத் தேடும் பேதைமையை என்னவென்று சொல்வது? ஆணோ பெண்ணோ அடுத்தவர் குணம் பார்த்துத் துணையாய் ஏற்கும் நாளில் மட்டுமே இனிய மணவாழ்க்கை உத்திரவாதமாகும். நறுக்கான கவிதை. பாராட்டுகள் ஐயா.