PDA

View Full Version : சிறந்த காதலி



மும்பை நாதன்
20-11-2013, 01:37 PM
அடையாளம் 1

துவளும் போது
தோள் கொடுத்து
துள்ளும் போது
தோளில் ஏறி
துணையாய் இருப்பவள்.

மும்பை நாதன்
20-11-2013, 01:38 PM
அடையாளம் 2

கைபேசியில் பேசுவது
யாருடன் என்பதை
காதுடன் சொல்ல
தயாராய் இருப்பவள்

மும்பை நாதன்
20-11-2013, 01:43 PM
அடையாளம் 3

குறைவான கோபமும்
வெகுளியான வெட்கமும்
குழைந்து கலந்த
குதூகல கவிதை !

மும்பை நாதன்
21-11-2013, 03:16 PM
அடையாளம் 4

குழந்தைக்கு
சத்தத்துடனும்
எனக்கு
சத்தமில்லாமலும்
முத்தம் கொடுக்கத்தெரிந்தவள்.

கீதம்
24-11-2013, 12:27 AM
அடையாளம் 1

துவளும் போது
தோள் கொடுத்து
துள்ளும் போது
தோளில் ஏறி
துணையாய் இருப்பவள்.

சிறந்த காதலிக்கான இலக்கணங்கள் சிந்திக்கவைக்கின்றன. துவளும்போது தோள்கொடுத்து நிறுத்துகிறாள். துள்ளும்போதோ தோள் ஏறிக்கொள்கிறாள். அதிகமாய்த்துள்ளாதே... ஆபத்து என்று தோளில் பாரமேற்றி சூசகமாய்ச் சொல்லிவைக்கிறாளோ... அழகு. பாராட்டுகள் மும்பைநாதன்.

கீதம்
24-11-2013, 12:36 AM
அடையாளம் 2

கைபேசியில் பேசுவது
யாருடன் என்பதை
காதுடன் சொல்ல
தயாராய் இருப்பவள்

காதுடன் சொல்லத் தயாராய் அவளிருப்பது சரி, அதைக் காதோடு விட்டுவிடத் தயாராய் இவனிருப்பானா? :confused:


அடையாளம் 3

குறைவான கோபமும்
வெகுளியான வெட்கமும்
குழைந்து கலந்த
குதூகல கவிதை !

வெகுளி என்றால் கோபம் என்று பொருளாம். எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள்.

குதூகலத்தில் பிறந்த குதூகலக் கவிதை ரசிக்கவைக்கிறது.


அடையாளம் 4

குழந்தைக்கு
சத்தத்துடனும்
எனக்கு
சத்தமில்லாமலும்
முத்தம் கொடுக்கத்தெரிந்தவள்.

அழகிய ரசனை. பாராட்டுகள்.

சிறந்த காதலிக்கான இலக்கணங்கள் அவ்வளவுதானா? இன்னும் உள்ளதா? அறியாதோர் அறிந்துகொண்டு சிறந்த காதலியாக செயல்பட வாழ்த்துக்கள்.

ஸ்ரீசரண்
24-11-2013, 03:55 PM
காதலியின் அடையாளத்தை
கவிதையாய் வடித்த
மும்பை நாதனுக்கு
பாராட்டுக்கள்