PDA

View Full Version : இப்போதே திருமணம்.



M.Jagadeesan
15-11-2013, 10:26 AM
கண்ணுக்கு லட்ஷணமாய் காசுபணம் உள்ளவனாய்
......கல்வியிலே கம்பனாய் காண்பதற்கு எளியவனாய்
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவனாய்
......பெரியோர்கள் கைகூப்பி வணங்கத் தகுந்தவனாய்
புண்ணுக்கு மருந்தேபோல் உதவும் குணத்தினனாய்
......புவிமாந்தர் போற்றும் உயர்குலத்துக் கோமானாய்
மண்ணிலே யாரேனும் இருந்தால் அவனைநான்
......மாலையிட்டு மணமுடிக்க இப்போதே ஒப்பிடுவேன்.

முரளி
16-11-2013, 05:12 AM
மிக அழகாய் இருந்தது ஜெகதீசன் ஐயா. பாராட்டுகள்.


அம்மாடி, மணமகனுக்கு இவ்வளவு தகுதிகளா தேவை? ஆசைப் படுவதில் தவறில்லை.ஆனால், மணப் பெண்ணிற்கு ஆசை கொஞ்சம் ஓவர் என்று தோன்றுகிறது. அப்படி என்ன உசத்தி அந்த பெண்?

எனக்கென்னமோ, இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகுமென்று தோன்றவில்லை. பத்திலே ரெண்டு பழுதில்லைன்னு பார்த்துட்டு போறதை விட்டுட்டு, இப்படியா நூத்து நூத்து பார்ப்பாள்? கொஞ்சம் சொல்லி வையுங்கள் அவளிடம்...:lachen001:

அப்புறம், இன்னொரு கேள்வி.

கண்ணுக்கு லட்ஷணமாய் காசுபணம் உள்ளவனாய்
......கல்வியிலே கம்பனாய் காண்பதற்கு எளியவனாய்
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவனாய்
......பெரியோர்கள் கைகூப்பி வணங்கத் தகுந்தவனாய்
புண்ணுக்கு மருந்தேபோல் உதவும் குணத்தினனாய்
......புவிமாந்தர் போற்றும் உயர்குலத்துக் கோமானாய்

இருப்பவன் மாலையிட்டு மணமுடிக்க இப்போதே ஒப்பிட தேடும் மணமகள் தகுதிகள் என்னவோ?பதிலும் உங்கள் கவிதையாகவே படிக்க ஆவல். நன்றி .

dellas
17-11-2013, 08:37 AM
பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்தவனாய் இருந்தாலே போது,ம் மற்றவை எல்லாம் சொல்லாமலே வந்து விடும்.

மும்பை நாதன்
17-11-2013, 04:24 PM
ஒரு பக்கம் இப்படி என்றால் இன்னொரு பக்கம் எப்படி என்றும் முரளியைப்போலவே எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை.

M.Jagadeesan
18-11-2013, 04:58 AM
மணமகளின் தகுதியை உரைக்கக்கேள்! முரளியே!

மூக்கோ சப்பை; முறமொத்த காது
தூக்கிய பற்கள் ; துருத்திய நாக்கு
முட்டைக் கண்கள்; முகமோ ஆந்தை
அட்டைக் கறுப்பு;கால்கள் நொண்டி
குட்டை உருவம்;குனிந்த முதுகு

அவளுந்தான்

கல்வி அறிவில்லா கைநாட்டுப் பேர்வழியாம்
காசு பணமில்லா அன்றாடம் காய்ச்சியாம்
ஒண்டிக் குடித்தனம்; ஓராயிரம் பொத்தலுடன்
அண்டி இருந்திடுவாள்; அதுவே அவள்வீடு.

அவளின் சபதத்தை அறிந்திருந்த பெரியோர்கள்
தவமாய் இருக்கின்ற அவளின் நிலைகண்டு

அம்மா!பெண்மணியே! அறிவில் சிறந்தவளே!
சும்மா வந்திடுமா சுகபோக வாழ்க்கையெலாம்?
முடவன் கொம்புத்தேன் ஆசை பட்டதுபோல்
நடக்காத ஒன்றிற்காய் பருவத்தை வீணாக்கி
நாளைக் கடத்துகிறாய்! நல்லவளே! இதுகேட்பாய்!
வேளை போய்விட்டால் மீண்டும் வந்திடுமா?
உன்னுடைய தகுதிக்கு ஊமையோ செவிடோ
கண்ணிரண்டும் இல்லாத குருடோ அதுவன்றி
கொட்டும் மழைக்கும் பள்ளிக்கு ஒதுங்காத
கட்டுடல் கொண்ட காளை ஒருவன்தான்
கிட்டுவன் கணவனாய் இதுவே உறுதியென

சட்டென அவள் உரைப்பாள்

ஐயா! பெரியோரே! அறிவிற் சிறந்தோரே!
எத்தனை குறைகள் என்னிடம் இருந்தாலும்
அத்தனையும் பொறுத்தென்னை ஆட்கொள்ள வந்திடுவான்
கண்ணை இமைபோலே வைத்தென்னைக் காத்திடுவான்
பெண்ணை இடபாகம் வைத்திட்ட சிவனருளால்
முப்பத்து முக்கோடி தேவரும் மலர்சொரிய
தப்பாது என்னைக் கைப்பிடித்து மணந்திடுவான்.
நிறத்தழகு என்பதெல்லாம் நில்லாது மறைந்துவிடும்
புறத்தழகு என்பதெல்லாம் காலத்தால் அழிந்துவிடும்
அழகென்று சொல்வதெல்லாம் அவரவர் பார்வையிலே
பழகும்குணமொனநிரந்தரஅழகாகும்
தானாகத் தங்கம் ஆபரணம் ஆகாது
தாமிரம் சேர்ந்தாலே தங்கநகை ஆவதுபோல்
தங்கமாய் அவரிருக்கத் தாமிரமாய் நானிருந்து
பங்கமிலா இல்வாழ்வைப் பாங்காக நடத்திடுவோம்.
அசைந்தாடி வருகின்ற உருள்பெருந் தேரொன்று
இசைவான அச்சாணி இல்லாமல் ஓடாது
தேராக அவரிருக்க அச்சாணி நானாக
ஊர்மெச்ச வாழ்ந்திடுவோம் உண்மை இதுவாகும்.
மணமுள்ள மலரெல்லாம் மாலையாய் ஆவதற்கு
இணக்கமாய் நாரொன்று இருந்திட வேண்டுமய்யா!
நன்மலராய் அவரிருக்க நாராக நானிருந்து
இல்வாழ்க்கை மாலைதனை இருவரும் கட்டிடுவோம்.

முரளி
18-11-2013, 05:31 AM
மிக அருமை.

.“நான் உமி கொண்டுவருகிறேன், நீ அவல் கொண்டுவா…நாம் இருவரும் அதை ஊதி ஊதித் தின்போம்”. என்பது போல் இருந்தது கவிதை. அதுதான் காதலா? அதுதான் ஆயிரம் காலத்து பயிரா?

' எனக்கு உன்னிடம் ஆயிரம் எதிர்பார்ப்பு உண்டு, ஆனால், என்னிடம் எதையும் எதிர்பாராதே'என்கிறாள் பெண். அது அவளது நோக்கு. கொஞ்சம் தன்னலம் தெரிகிறது.

ஆனால், அவனது எதிர்பார்ப்பு என்ன? அவனது பார்வைக் கோணத்தில். இதையே நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்.

இதை ஒரு கவிதையாய் வடிக்க விழைகிறேன், நேரம் கிடைக்கையில். முடியுமா தெரியவில்லை. முயற்சிக்கிறேன்.

நன்றி பொறி கொடுத்தமைக்கு. சிறந்த கருத்துக்கு பாராட்டுக்கள் ஜகதீசன் ஐயா.

M.Jagadeesan
05-08-2014, 03:10 AM
தங்களின் பாராட்டுக்கு நன்றி முரளி .

M.Jagadeesan
29-04-2015, 02:50 PM
டெல்லாஸ் மற்றும் மும்பைநாதன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி !

ஆதவா
29-04-2015, 03:08 PM
கவிதையெல்லாம் ஓகேதான்..
நடப்பு வாழ்க்கையில் ஒ0வ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிறது. எதிர்பார்ப்பே இல்லையென்று சொன்னால் கூட மனதோரம் கொஞ்சமாவது “அவள் அப்படி இருக்கவேண்டும்.. அவன் இப்படி இருக்கவேண்டும்” என்று தோணுகிறது... அதுதான்ங்க எதார்த்தம்.

முதல் கவிதையில் அந்த பெண்ணின் கர்வம் தெரிகிறது... அப்படி ஒருவன் இருந்தால் நான் அவனை மணப்பேன்;.... அப்படி யாரும் இல்லை என்பதாகும்...

அப்பறம்..

எனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது தெரிந்துவிட்டது...