PDA

View Full Version : அழகோம்பல்-2,3



arun karthik
09-11-2013, 12:32 PM
பாவடைத் தாவணியும்,
பட்டுக் குஞ்சமும்,
வெள்ளிக் கொலுசுகளும்,
நமட்டுச் சிரிப்பும்,
நீ அணிந்து தெருவில் வந்தபோது,
ஊர்த் திருவிழாவிற்கென்று,
அலங்கரிக்கப் பட்ட தெருவானது,
அழகிழந்து காணப்பட்டது....

***********************************

என்னுள் தோன்றி,எழுத்தில் படிந்த
அத்தனை கவிதைகளும்,இதழ்களால் கொல்லும்
உன் கொடிய புன்னகையை விட,
சற்றேனும் அழகு குறைந்தவையே...

மும்பை நாதன்
09-11-2013, 02:20 PM
திருவிழா அலங்கரிப்பு சூரியன் முன் நட்சத்திரங்களைப் போல் ஆகி விட்டதோ ?