PDA

View Full Version : பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்...!!!



சுதா
09-11-2013, 05:41 AM
http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/styles/large/public/images/42395/baby%20and%20mom.JPG?itok=-LHT-7Vk


கம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!

ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
வீர குடி வித்தே !!!

பொதிகை தமிழே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!

எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!

மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்காக மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!

அக்கணமே மனதில் மழை
இன்ப துளிகள் கண்களில்
சிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ
அம்மா என்றழைக்க வருவதையெண்ணி ..!!!

வலியின் வன்முறையில்
ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்க ..!!!

அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசவித்து ..!!!

அள்ளி அணைத்து முத்தமிட்டேன்
அங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .
அங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...!!!





by sutha

மும்பை நாதன்
09-11-2013, 02:12 PM
உலகிலேயே மிகவும் முதன்மையான உறவைப் பற்றி கவிதையும், கவிதையின் கருத்துக்குப் பொருத்தமான படமும் மிக மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.

சுதா
11-11-2013, 08:24 AM
Nandri thola:)

ஜான்
12-11-2013, 02:15 AM
கருத்துரு வெகு அருமை,சுதா....

தாய்மையடையும் வழியும் வேதனையும் யாம் அறிய இயலும் உணர்தாழ் இயலாது..
வார்த்தைக் கோர்ப்பு அவற்றை உணர வைக்கிறது..

ரணமாக்கியது என்று வரியை முடிப்பது உரைநடையாகிவிடும்...ரணமாக்க என்று இருந்தால் வாசிக்கையில் கவிதை வடிவம் வந்துவிடும்!
இன்னும் நிறையப் படைக்க வாழ்த்துகள்

சுதா
14-11-2013, 11:24 AM
நன்றி அய்யா !! நீங்கள் கூறியவாறு திருத்தம் செய்து விடுகிறேன்!!! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி அய்யா நன்றி !!

சுதா
18-11-2013, 07:56 AM
நன்றி தோழமையே