PDA

View Full Version : கி.வா.ஜ வின் சிலேடைகள்.



M.Jagadeesan
04-11-2013, 02:56 PM
புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.ஜ. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில்வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ.,

'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.

'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.

'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா.ஜ.

உள்ளே வெளியே
கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".

வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

தண்ணீருக்குக் கவலையில்லை
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது அது. ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளிக் கட்டிடம்.

கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார் விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள். கிணற்றையும் காட்டினார்கள்.

'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்!

உப்புமா குத்துகிறதா''
*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய
உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.

'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.

கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.

ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார்
கி.வா.ஜ.!

மும்பை நாதன்
04-11-2013, 03:43 PM
யாரையும் புண்படுத்தாத அந்தக்காலத்து நகைச்சுவையை பகிர்ந்து கொண்டதன் மூலம் ரசிக்க வைத்ததற்கு நன்றி.

ரமணி
05-11-2013, 02:20 AM
கி.வா.ஜ.வின் சிலேடைகள் எத்தனை முறை படிக்காலும் தெவிட்டாத விருந்து. அவரது அனைத்து நூல்களையும் இங்குத் த்ரவிறக்கம் செய்துகொள்ளலாம்:
http://thamizhagam.net/nationalized%20books/Ki%20Va%20Jagannathan.html

ஜான்
05-11-2013, 06:47 AM
மிக்க நன்றி ஜெகதீசன் அவர்களுக்கும் ரமணி ஐயாவுக்கும்
தரவிறக்கிக் கொண்டேன்

M.Jagadeesan
05-11-2013, 10:38 AM
மு.நா, ரமணி, ஜான் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி.

TamilManavan
17-05-2014, 06:13 AM
அருமையான சிலேடைகள். பதிவுக்கு நன்றி.

arun karthik
18-05-2014, 08:13 AM
பகிர்ந்தமைக்கும், கி.வ.ஜ என்பவரைப் பற்றி அறிய வைத்தமைக்கும் நன்றி ஜெகதீசன் ஐயா... சுட்டியை அளித்த ரமணி ஐயாவுக்கும் நன்றிகள்...