PDA

View Full Version : பைலின் புயல் ...!



vasikaran.g
27-10-2013, 09:48 AM
பைலின் புயல் ...!
வயலின் வாசிக்க ,
வயலுக்கெல்லாம் வலியில்
விழிகள் வலிக்க ,
நீர் தொண்டைக்குழிகளை நிறைக்க ,
இறைவனை உதவிக்கு விளிக்க,
சூரியனோ காரியமின்றி
ஓர் அகத்தில் ,ஒளிந்திருக்க,
ஒளி இழந்திருக்கு ,
ஒலி செவியை பிளந்தெடுக்க ,
நம் அரசியல்வாதிகள்
அடிக்கலாம் இன்னொரு
கொள்ளை என்று மகிழ்ந்திருக்க ,
பாவம் ! திருவாளர் பொது ஜனமோ ,
பிழைப்புக்கு வழியென்ன
என்ற குழப்பத்தில் !
நடந்ததென்ன ! நடப்பதென்ன !!
நடக்க இருப்பதென்ன !!!
ஒன்றும் புரியாமல் உழன்றுகொண்டு .

ஏழைகள் ஏழைகளாக இருப்பதன்
ரகசியமே இதுதானே...
இந்தியா என்றாலே ,
அதுதானே... என்ற
குமட்டும் நினைவுடன்
வளியின் தலைவன்
விழியில் ஈரத்துடன்
தன வினையை எண்ணி
வருத்தக் குடைப் பிடித்து
நமது துன்பங்களை எடைபிடித்து
மனம் துடிக்க நெஞ்சம் புடைக்க ,
நஞ்சு குடித்தவன் போல்
இங்கும் அங்கும் நடந்து
பிதற்றிக் கொண்டிருந்தான் .!

ஜான்
27-10-2013, 12:02 PM
சீரான வார்த்தைப் பிரயோகம் "வசீகரி"க்கின்றது