PDA

View Full Version : பிரிவு



இராஜிசங்கர்
25-10-2013, 06:53 AM
சகிக்கச் சொல். சகிக்கிறேன்
இன்பம் என ஏற்கச் சொல்லாதே!
என்னால் முடியாது.

கும்பகோணத்துப்பிள்ளை
25-10-2013, 12:47 PM
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும்-இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

என்ற கண்ணதாசனின் வரிகளை சொல்லத்தோன்றுகிறது

பிரிவு துன்பந்தான்!
சகிப்பின் கூடவே இன்பமும்.....
யாருக்காகவென்பதில் ஒரு சுகமிருக்கும்...
உங்களவருக்காக..... மக்களின் நல்வாழ்விற்க்காக
விட்டுக்கொடுக்கும்...மனதில் இன்பம் தங்கும்.

மும்பை நாதன்
25-10-2013, 04:31 PM
சகிக்கச் சொல். சகிக்கிறேன்
இன்பம் என ஏற்கச் சொல்லாதே!
என்னால் முடியாது.

சகிப்பதோ
சுகிப்பதோ
இன்பமோ
துன்பமோ
இருவருக்கும்
பொதுதானே.

M.Jagadeesan
26-10-2013, 01:46 PM
" காட்டுக்கு வராதே ! துன்பங்கள் அதிகம் " என்று இராமன் சொன்னபோது சீதை,
" நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு ? " என்று சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

vasikaran.g
27-10-2013, 03:51 PM
இரன்டு வரி! இதய வலி !