PDA

View Full Version : உறுத்தல்



ஜான்
23-10-2013, 05:00 PM
என்னைப் பற்றிய
எந்த சிந்தனையுமின்றி
தன் போக்கில் இருக்கின்றது
மரவட்டை !


விளையாட்டென நினைத்து
குச்சியில் பிடித்து
சுருண்டுகொண்டதும் தூக்கி எறிந்திருக்கிறேன்
அதன்
குடும்பத்தைப் பிரித்து !


குணங்கெட்டுத திரிந்து போன பொழுதொன்றில்
செருப்புக் காலால்
சரக்கென மிதித்துக்
கொன்று போட்டிருக்கிறேன் !‘


இசைவான தருணமொன்றில்
மரவட்டைகள் கூடுவதைப்
பார்த்துக் களித்திருக்கிறேன் !

ஞானம் நிறைந்தவனாய்க்
கற்பித்துக் கொள்கையில்
அது செல்வதை
வெறுமனே செல்லவிட்டு
வேடிக்கை பார்த்திருக்கிறேன்


அனைத்திலும்
என்னைப் பற்றிய
எந்த சிந்தனையுமின்றி
தன் போக்கில் இருக்கின்றது
மரவட்டை !

கும்பகோணத்துப்பிள்ளை
23-10-2013, 07:06 PM
மரவட்டை மனது
நினைவுகளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது
சுவடுகளின் பாதையில்
பனித்துளிகள் படர்ந்து
கொண்டிருக்கிறது!
மனக்கசிவுகளிலுறும்
பனித்துளிகள்....
பளபளக்கின்றன ஜான்!
வாழ்த்துகள்!

ஜான்
24-10-2013, 01:48 AM
பின்னூட்டம் கவிதையாக
நன்றிகும்பகோணத்துப்பிள்ளை

M.Jagadeesan
24-10-2013, 01:54 AM
சின்னஞ் சிறுவயதில் சிற்றில் பருவத்தில்
......சிறுமைகள் பலசெய்தே மகிழ்ந்திருந்த காலமது!
வண்ணமிகு வண்டுகள் வான்பறக்கும் தும்பிகள்
......வாலாட்டும் நாய்கள் பொதிசுமக்கும் கழுதைகள்
இன்னபிற உயிரினம் சிறுவர்தம் கையினால்
......இன்னல்கள் உற்றதம்மா! இனிமேலும் உயிரினங்கள்
புன்மையுற்று வாழாது இன்புற்று வாழ்ந்திடவே
......புளூகிராஸ் இயக்கத்தில் அவ்வுயிரைச் சேர்த்திடுவோம்.

மும்பை நாதன்
24-10-2013, 03:52 PM
எதிரெதிராய் வந்தாலும்
ஒருபோதும் மோதாத
புகைவண்டி போலவே
ஓட்டம் காணலாம் !

ஜான்
25-10-2013, 12:58 AM
நன்றி ஜெகதீசன் ,மும்பைநாதன்

vasikaran.g
27-10-2013, 04:01 PM
மரவட்டை
மனதை தொட்டது !