PDA

View Full Version : கனவிலும் அவன் !



M.Jagadeesan
18-10-2013, 01:32 AM
பாலும் கசந்ததடீ! படுக்கையும் நொந்ததடீ!
கோலக் கிளிமொழியும் குத்தல் எடுத்ததடீ!
காணும் இடமெல்லாம் காதலன் உருவங்கள்
கண்ணில் தெரியுதடீ! வேதனை செய்யுதடீ!
இரவில் படுத்தாலும் தூக்கம் வருவதில்லை!
மறக்க முடியலையே மன்னன் திருமுகத்தை!
காட்டுத் தீபோல பசலை படர்ந்ததடீ!
வாட்டும் தாபத்தால் மேனி கரைந்ததடீ!
கனவில் வந்தென்னைக் கட்டி அணைக்கின்றான்!
கண்ணே! எனச்சொல்லி முத்தம் தருகின்றான்
கூந்தல் திருத்தியே மலரைச் சூட்டுகிறான்
ஏந்திழையே! என்னுயிர் நீயே என்கின்றான்.
தின்னும் பண்டங்கள் எல்லாம் தருகின்றான்
என்கண்ணில் நீர்வழிந்தால் உதிரம் சொட்டுகிறான்
பாதம் தொட்டென்னை கொலுசை அணிவித்தே
நாதத்தின் வடிவே! நம்முடைய காதலுக்குப்
பூதங்கள் ஐந்தும் சாட்சியே எனச்சொல்லி
வேதங்கள் ஓதிட மங்களநாண் தன்னைக்
கட்டும் வேளையிலே கனவு கலைந்ததடீ
காளை சென்றதனால் கவலை வந்ததடீ!