PDA

View Full Version : அதைமட்டும் சொல்.



M.Jagadeesan
17-10-2013, 04:45 AM
புகைப்பழக்கம் உனக்கிருந்தால் என்னிடம் சொல்லாதே!
பகைவர்கள் உனக்கிருந்தால் அதையும் சொல்லாதே!
குடிப்பழக்கம் உனக்கிருந்தால் என்னிடம் சொல்லாதே!
அடிமையாய் குற்றேவல் செய்தாலும் சொல்லாதே!
சூதாடும் பழக்கம் இருந்தாலும் சொல்லாதே!
ஊதாரியாய் செலவு செய்தாலும் சொல்லாதே!
எதைச்சொல்ல மறந்தாலும் எனக்குக் கவலையில்லை
"இந்தப் பிறவிக்கு இன்னொரு பெண்ணை நான்
சிந்தையாலும் தொடேன் ! "என்பதை மட்டும்
சொல்ல மறவாதே ! சொல்ல மறவாதே !

ஸ்ரீசரண்
17-10-2013, 03:46 PM
கவிதை அருமை...........

வாழ்த்துக்கள்

M.Jagadeesan
19-10-2013, 01:42 AM
நண்பர் ஸ்ரீசரண் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.