PDA

View Full Version : அதை மட்டும் சொல்லாதே !



மும்பை நாதன்
16-10-2013, 05:21 PM
உனக்கு கிரிக்கெட் பிடிக்காதென்றாய்
கிரிக்கெட் பார்ப்பதையே விட்டொழித்தேன்
அரைக்கை சட்டை பிடிக்காதென்றாய்
முழுக்கை சட்டைக்கு உடனே மாறினேன்
'அந்த' நடிகரை பிடிக்காதென்றாய்
அவர் நடித்த படங்களை நானும் வெறுத்தேன்
'அந்த' நடிகையை பிடிக்காதென்றாய்
அவர் நடித்த படங்களை நானும் வெறுத்தேன்
'அந்த' எழுத்தாளரை பிடிக்காதென்றாய்
அவர் எழுதிய புத்தகங்களை விட்டெறிந்தேன்
'அந்த' அரசியல் தலைவர் பிடிக்காதென்றாய்
... ... ... ... ... ... ... ... ...
கறுப்பு நிறம் பிடிக்காதென்றாய்
... ... ... ... ... ... ... ... ...
தக்காளி சட்னி பிடிக்காதென்றாய்
... ... ... ... ... ... ... ... ...
உன்னால்,
உன் விருப்பு வெறுப்பினால்
சில நண்பர்கள் பகைவர்களானார்கள்
சில விரோதிகளை விரும்பக் கற்றுக்கொண்டேன்

எல்லாம் சரிதான் .....
ஆனால் இப்போதோ
'என்னையே எனக்கு பிடிக்கவில்லை' என்கிறாயே
அதை மட்டும் சொல்லாதே கண்ணே.

M.Jagadeesan
17-10-2013, 01:21 AM
முதலில் உம் காதலியிடம் , " என்னைப் பிடித்திருக்கிறதா ? " என்று கேட்டிருந்தால் இத்தனையும் நீங்கள் இழக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.

ஸ்ரீசரண்
17-10-2013, 04:50 PM
ஏன் தல....
உங்க ஆளு,
எனக்கு பிடிக்காதுன்னு சொல்ற எல்லாத்தையும் நீங்க விட்டுட்டீங்க........
சரி.
என்னையே எனக்கு பிடிக்கலைனு சொல்றங்க.....
விட்டுட வேண்டியதுதான.................
இதுக்கு போயி ரொம்பதான்.............

மும்பை நாதன்
18-10-2013, 02:23 AM
முதலில் உம் காதலியிடம் , " என்னைப் பிடித்திருக்கிறதா ? " என்று கேட்டிருந்தால் இத்தனையும் நீங்கள் இழக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.

அவ்வளவு சமத்து இருந்தால் நான் ஏன் இப்படி அவஸ்தை படப்போறேன் ?

மும்பை நாதன்
18-10-2013, 02:29 AM
ஏன் தல....
உங்க ஆளு,
எனக்கு பிடிக்காதுன்னு சொல்ற எல்லாத்தையும் நீங்க விட்டுட்டீங்க........
சரி.
என்னையே எனக்கு பிடிக்கலைனு சொல்றங்க.....
விட்டுட வேண்டியதுதான.................
இதுக்கு போயி ரொம்பதான்.............
வேற ஒண்ணும் இல்ல..இன்னொரு ஆள் கிடைக்கிற வரைக்கும் அப்படியெல்லாம் விட்டுற முடியாதில்ல !

ஸ்ரீசரண்
18-10-2013, 05:25 AM
பழையன கழிதலும், புதியன புகுதலும்....

பழையது போனா தானே புதுசு வரும்.....

மும்பை நாதன்
18-10-2013, 03:02 PM
பழையன கழிதலும், புதியன புகுதலும்....

பழையது போனா தானே புதுசு வரும்.....

யப்பாடி ! ரொம்ப விவ(கா)ரமான ஆளாய் இருப்பீங்க போல..