PDA

View Full Version : திசை தெரியாதவன்



மும்பை நாதன்
16-10-2013, 04:53 PM
சந்தித்த வேளை யெல்லாம்
நீ என்னை நிந்தித்த வேளையாய் ஆனதே
காதலிக்க கொஞ்சம்
காலம் கொடுத்தால் அகாதோ ?
காதலை அனுபவிக்கத் தொடங்கு முன்னே
கல்யாணத்திற்கு என்ன அவசரம் ?
சல்லாபம் செய்ய தயாராய் நான் வந்தால்
சண்டை போடத்தயாராக நீ வருகிறாய்
முத்தம் கொடுக்க நான் வந்தால்
குத்தம் சொல்லி நீ போகிறாய்
உட்கார வைத்து
உணர்வெல்லாம் புரிய வைத்து
உரிமையாய் உனை நெருங்கினால்
ஒரே வசனத்துடன் ஓடியே போகிறாய்
"எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இருக்கு"
கணக்கில் நான் முதுகலைப்பட்டமாம்
பல்கலைக்கழகம் சொல்கிறது
பாவம் அவர்களுக்குத் தெரியாது
காதல் கணக்கில் நான் திசை தெரியாதவன் என்று.

arun karthik
16-10-2013, 05:14 PM
அட்டகாசம்.... கணக்கில் கொஞ்சம் பிணக்கு இருந்தால் தானே அழகு...