PDA

View Full Version : ஏமாற்றம்.....



arun karthik
15-10-2013, 05:16 PM
நீ வரமாட்டாய் என்பது
எனக்குப் புரிகிறது...
ஆனால் உன் விரல் படிந்து பழகிய என்
கண்ணீருக்குத்தான் ஏனோ புரிவதில்லை..
தத்தம் வந்து விரும்பி ஏமாறுகிறது,
உன் விரல்களைக் காண முடியாமல்!

மும்பை நாதன்
16-10-2013, 04:33 PM
நீ வரமாட்டாய் என்பது
எனக்குப் புரிகிறது...
ஆனால் உன் விரல் படிந்து பழகிய என்
கண்ணீருக்குத்தான் ஏனோ புரிவதில்லை..
தத்தம் வந்து விரும்பி ஏமாறுகிறது,
உன் விரல்களைக் காண முடியாமல்!
உடனே உலரும் கண்ணீருக்கு
உள்ள உணர்வு கூட
உந்தன் இதயத்திற்கு
இல்லாமல் போனது ஏனோ ?

வெங்கி
21-11-2013, 08:29 AM
ஏமாற்றம்தான்...

கீதம்
25-11-2013, 10:33 PM
நீ வரமாட்டாய் என்பது
எனக்குப் புரிகிறது...
ஆனால் உன் விரல் படிந்து பழகிய என்
கண்ணீருக்குத்தான் ஏனோ புரிவதில்லை..
தத்தம் வந்து விரும்பி ஏமாறுகிறது,
உன் விரல்களைக் காண முடியாமல்!

விரல் படிந்து பழகிய கண்ணீர் - இவ்வரிகள்தாம் அதிகம் யோசிக்கவைக்கின்றன.

விரல் படிந்ததால் கண்ணீர் வழிகிறதா? கண்ணீரைத் துடைக்க விரல் படிகிறதா?

ஒருவேளை வழியும் கண்ணீரைத் துடைக்க விரல் படிவதாயின் துடைத்துத் துடைத்தே சோர்ந்துபோயினவோ அவ்விரல்கள்!

எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் ஒருங்கே காட்டும் வரிகள் நன்று. பாராட்டுகள் அருண் கார்த்திக்.

தத்தம்- நித்தம்?