PDA

View Full Version : நிலவு கறுத்ததேன் ?



M.Jagadeesan
10-10-2013, 03:53 AM
பாட்டி வடைசுட்டுப் புகைஎழுந்த காரணத்தால்
......பளிங்குபோன்ற என்மேனி மிகக்கறுத்துப் போயிற்று
பாட்டியும் பலநாளும் வாடகை கொடுக்காது
......பலகாரம் விற்றுவர கோபம் மிகக்கொண்டு
ஓட்டிவிட எண்ணியே ஒருநாள் முன்சென்று
...... "ஓடிப்போ " என்றுரைத்தேன் வேறேதும் வழியின்றி
பாட்டியும் என்வீட்டைக் காலிசெய்த நாள்முதலாய்
......பளிங்கு நிறத்தைநான் மீண்டும் பெற்றேனே !

மும்பை நாதன்
10-10-2013, 03:38 PM
வடை தேடி காகங்கள்
வந்து வந்து போவதால்தான்
கருப்பும் வெளுப்பும்
மாறி மாறி வருகிறதோ ?

M.Jagadeesan
12-10-2013, 02:34 PM
நன்றி மு.நா. அவர்களே !
தங்கள் கற்பனையும் ரசிக்கும்படி உள்ளது.