PDA

View Full Version : காதல் கணக்கு



மும்பை நாதன்
08-10-2013, 05:27 PM
நான் பெற்றது:
உன் கடைக்கண் பார்வையும் கா(த)ல் புன்னகையும்
ஆனால் கொடுத்ததோ முழுமையாய் என்னை.
இது என்ன கணக்கு எனக்குப் புரியவில்லை !

கும்பகோணத்துப்பிள்ளை
08-10-2013, 09:08 PM
ஓ! இதைத்தான் கணக்குபன்றதுன்றாங்களோ!
ஒரு கனக்காத்தான் இருக்கு கவிதை!

rajapandian21
09-10-2013, 03:37 AM
உன் கடைக்கண் பார்வைக்கு என் எடையளவு
பொன் கொடுத்தாளும் போதாது பெண்ணே

தங்கள் கணக்கு தொடரட்டும்

மும்பை நாதன்
09-10-2013, 03:43 PM
உன் கடைக்கண் பார்வைக்கு என் எடையளவு
பொன் கொடுத்தாளும் போதாது பெண்ணே

தங்கள் கணக்கு தொடரட்டும்

தங்கம் விலை உயர்ந்ததென்று
தரணியிலே பலபேரும்
தவியாய்த் தவிக்கின்றனர்
தங்கள் கவிதை கண்டதும்தான்
காரணத்தை நான் உணர்ந்தேன்.

மும்பை நாதன்
09-10-2013, 04:07 PM
எங்கு வேண்டுமானாலும் போய்க்கொள்
என்ன படிப்பு வேண்டுமானாலும் படித்துக்கொள்
எந்த அலுவலகத்தில் வேண்டுமென்றாலும் வேலை செய்துகொள்
யாரை வேண்டுமானாலும் மணந்துகொள்
எப்படி வேண்டுமானாலும் குடித்தனம் நடத்திக்கொள்
என்றெல்லாம் நான் சொல்லியிருப்பேன்
அன்றொரு நாள்
கால் புன்னகையை
அரையிருட்டில்
முழுமனதாய் நீ தராதிருந்தால் !

M.Jagadeesan
11-10-2013, 06:20 AM
கவிதை நன்று மு.நா. அவர்களே!

புன்னகையின் விலை
====================
பொன்னகைகள் ஆயிரம் அள்ளியே தந்தாலும்
......பொதியமலைப் பிறந்திட்ட தமிழ் கற்றாலும்
மின்னுகின்ற மேகலை இடையணிந்த மாதர்
......இருபுறமும் நின்றிருந்து வெண்சாமரம் வீச
மன்னவனாய் அரியணையில் வீற்றிருந்து நாளும்
......மண்ணுலகை ஆண்டாலும் மாமணியே ! உந்தன்
புன்னகைக்கு இவையெல்லாம் ஈடாமோ? கண்ணே !
......புறப்பட்டு வந்திடுவாய் புத்துலகம் காண்போம்.

மும்பை நாதன்
14-10-2013, 02:58 PM
... ...