PDA

View Full Version : தமிழ்



rajapandian21
08-10-2013, 03:28 AM
நான் தமிழன்
எனக்கு தமிழ் தெரியும்
நான் தமிழ் பேசுகிறேன்
ஆனால் தமிழை -
தமிழாக பேசவில்லை

கும்பகோணத்துப்பிள்ளை
08-10-2013, 09:33 PM
நானும் பேசுகிறேன் தமிழ்
நானாக பேசவில்லை தமிழ்
என் தாயல்லவோ தந்தாள் எனக்குத்தமிழ்
என் தாய்மொழி தமிழ்

M.Jagadeesan
09-10-2013, 10:09 AM
நானும் தமிழன்தான்; தமிழ்நாட்டில் பிறந்தவன்தான்
......நல்லதமிழ் பேசுவதில் நாட்டம் கொண்டவன்தான்
ஆனாலும் ஆங்கிலம் கலக்காத நற்றமிழை
......அடியேனால் பேசிட அறவே முடியவில்லை
தேனொத்த தமிழ்ப்பாக்கள் படித்த என்வாயால்
......தேவாரமும் வாசகமும் ஓதிய என்வாயால்
வானத்துத் தேவர்களும் வணங்கிய செந்தமிழை
......வாயாரப் பேசிட முடியாது வருந்துகிறேன்.