PDA

View Full Version : வாரமும் தாரமும்



M.Jagadeesan
07-10-2013, 04:49 AM
ஞாயிற்றின் ஒளியெல்லாம் உன்வதன ஜோதியிலே
போயிற்று போயிற்று மங்கியே போயிற்று!
உன்அழகில் தோற்றோடியத் திங்களைத் தேற்றியே
கங்கைக்கு அருகினிலே வைத்திட்டான் சிவபெருமான்
செவ்வாயின் அழகினிலே சொக்கினேன் உந்தனுக்கு
செவ்வாய் தோஷம் இருந்தாலும் உன் கழுத்தில்
புதனன்று தாலியைக் கட்டிய வேளையில்உன்
வதனம் சிவந்ததம்மா! வந்திருந்த உறவினரும்
" தயாபரியே! தருமத்தின் தேவதையே !விண்ணிலுள்ள
வியாழன்போல் உன்மனது விசாலம் ! " என்றுரைத்தார்.
வெள்ளி முளைப்பதற்கு முன்பாக நீகுளித்து
அள்ளி முடிந்த கூந்தலிலே வேடுகட்டி
சனிஎன்னும் கடவுளை நீதொழும் வேளையிலே
பிணியகன்று வீட்டினிலே மங்கலம் வந்ததம்மா!

மும்பை நாதன்
07-10-2013, 04:00 PM
யப்பப்பப்பா ! ஒரு வாரத்திற்குள் என்னென்ன வேலையெல்லாம் முடித்து விட்டீர் !

M.Jagadeesan
05-08-2014, 03:54 AM
நன்றி ! மும்பைநாதன்.

கீதம்
06-08-2014, 12:52 AM
வாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும் அழகு. பாராட்டுகள் ஐயா.

Sabeekshana
06-08-2014, 03:33 PM
தாரத்தால் எவ்வாறு வாரத்தின் நாள் ஒவ்வொன்றும் இனிதாகும் என்பதை விளம்பி செல்கிறது இந்த அழகிய கவி!!

நன்றி ஐயா!!

M.Jagadeesan
07-08-2014, 03:05 PM
கீதம் , சபீக்ஷனா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !

கும்பகோணத்துப்பிள்ளை
07-08-2014, 10:17 PM
உங்கள் கவிதை
வாரமான தாரமட்டுமல்ல
தாரமென்ற வரம்!
பெருகட்டும் வாரணம்மாயிரமாய்!

அனுராகவன்
11-08-2014, 04:29 PM
அருமையாக உள்ளது....பாராட்டுக்கள்

M.Jagadeesan
11-08-2014, 04:39 PM
நன்றி அச்சலா !

நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2014, 09:12 AM
கவிதை அருமை...

ஓவியன்
26-04-2015, 10:48 AM
வரம் வாங்கிவந்தவரய்யா, நீங்கள்
அழகாக
வாரத்தையும் தாரத்தையும் கவி மாலையாக்கும்
வித்தை அறிந்தமையால்....!!

M.Jagadeesan
26-04-2015, 11:31 AM
நாஞ்சில் த.க.ஜெய் , ஓவியன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !