PDA

View Full Version : காகம்



rajapandian21
04-10-2013, 01:48 PM
வீதியில் ஓர் காகம் மடிந்து கிடப்பது கண்டு
சிலநூறு காகம் ஒப்பாரி வைத்தது
நான் நினைத்தேன் மடிந்தது தலைவன் என்று
மற்றொரு நாள் ஓர் காகம் மடிந்து கிடக்க
சிலநூறு காகம் ஒப்பாரி வைத்தது
மீட்டும் நினைத்தேன் மடிந்தது தலைவன் என்று
இதே போல் பலநாள் பல காகம் மடிய
பலநூறு காகம் ஒப்பாரி வைத்தது
யாரோ சொல்ல அறிந்தேன்
காக்கை கூட்டதில் தலைவன் இல்லை என்று
கேட்டேன் எனக்கு நானே
பின்பு ஏன் இவ்வளவு ஒப்பாரி என்று
ஒரு நாள் உணர்ந்தேன்
காக்கை கூட்டத்தில் தலைவனும் இல்லை
ஜாதியும் இல்லை மதமும் இல்லையென
அவை தன் இனத்தில் ஒன்று மடிந்ததற்கு
அனைத்தும் கூடி ஒப்பாரி வைத்ததென
இதை புரிய பல காலம் ஆனது எனக்கு
இதில் வியப்பதற்கு யேதுமில்லை
நான் மனிதனாயிற்றே

கீதம்
05-10-2013, 01:29 AM
நாடு, இனம், மொழி, மதம், சாதிகளைக் கடந்து சக உயிரை மதிக்கும் சிநேக மனோபாவம் என்று நமக்குள்ளும் உதிக்கும்?

ஏங்க வைக்கிறது கவிதை. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஜான்
05-10-2013, 06:23 AM
நம்மையும் பாரு நாடே சிரிக்கும் என்ற எம் ஜி யார் பாடல்தான் நினைவு வருகிறது