PDA

View Full Version : பெண்

rajapandian21
04-10-2013, 01:45 PM
நாட்டை மொழியை தாயை வணங்குவான்
தாயை தெய்வமாய் தொழுவான்
ஆண் பிள்ளை பிறந்தால் தங்க சங்கிலே பாலுற்றுவான்
பெண் பிள்ளை என்றாலோ கள்ளிப்பால் ஊற்றி கொள்வான்
பருவம் வரும் முன்வரை பாராட்டி சீராட்டி வளர்ப்பான்
பருவம் வந்த பின்னோ வயிற்றில் நெருப்பு என்பான்
வீட்டிற்கு வரும் பெண்ணை மகாலெட்சுமி என்பான்
அவள் தானே மகா செல்வத்தோடு வருகிறாள்
எவரேனும் சரஸ்வதி பராசக்தி துர்கை என்பானா
மாட்டான் கூற மாட்டான் காரணம் இவர்களிடம் செல்வம் இல்லையே
மாதம் 27 நாளும் கூடி களவி களியுருவான்
மீதி நாட்கள் தீட்டு என்பான் வீட்டிற்கு வெளியே என்பான்
இவன் பல பெண்களை மணப்பானாம்
கேட்டால் உடலில் வலு உள்ளதென்பான்
இவளை மட்டும் மணக்க விடமாட்டனாம்
மீறி மணந்தால் வேசி என்பான்
இவள் மடிந்தால் இவன் வானவில்லாய் வலம் வருவானன்
இவன் மடிந்தால் இவளை மட்டும் சமாதன நிற சிலையாக்குவான்
சமத்துவம் சமதர்மம் சமவுரிமை என்பான்
பாரதியின் இரு தினத்தன்று மட்டும்
மேடையில் அவன் கவிதை படிப்பான்
அர்த்தநாரிஸ்வரனை விழுந்து தொழுவான்
நூற்றில் மூன்று பங்கு உரிமை தரக்கூட யோசிப்பான்

கீதம்
05-10-2013, 01:25 AM

பெண்ணைப் போற்றவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். சகமனுஷியாய் மதித்து நடத்தலே சரியானது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை சமமாய் நடத்தி வளர்த்தாலே.. பின்னாளில் ஆதிக்கமனோபாவம் அகன்றுபோகும்.

வீட்டில் விதைக்கப்படவேண்டியதைத் தவறவிட்டுவிட்டு சமுதாயத்தைச் சாடிக்கொண்டிருக்கிறோம் நாம்.

சீர்மிகு சிந்தனைகளைத் தாங்கிவந்த சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

(பிழைதிருத்தம்- கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வான், கலவி களியுறுவான்)