PDA

View Full Version : வெண்பாவில் விடுகதைகள்



ரமணி
01-10-2013, 10:34 AM
வெண்பாவில் விடுகதைகள்

குறட்பாவில் விடுகதைகள் தொடரை அடுத்துப் பெரிய விடுகதைகளை வெண்பாவில் சேகரிப்போம்.
விடை ஈற்றடி வரும் ஒரு மறைசொல்லில். மற்ற விதிகள் முன்போல.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!

--ரமணி, 01/10/2013

விடைகள் அடுத்த அஞ்சலில்.

தாமரை
02-10-2013, 06:27 AM
.

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்கவும்
பாலாழி வண்ணனும் பாம்பணையில் தூங்கவும்
கோலமில் லாவொருவன் போய்வருவான் கண்விழித்தே
ஓலமுடன் பேர்கேட்டால் போச்சு.

மூச்சு!!

இலையுண்டு இல்லை கிளைகளே காற்றில்
அலையும் மலருண்டு வாசமில்லை காயில்
இலைவிதையே கன்றுண்டு இல்லை பசுவே
பலபட்டை யுண்டெனினும் கட்டையென் றில்லை
விலையில்லா ஏழையிது வே!

வாழை

ரமணி
02-10-2013, 04:06 PM
தாமரை அவர்களுக்கு,

மூச்சு, வாழை இரண்டுமே சரியான விடைகள், கங்கிராட்ஸ்!

ரமணி
02-10-2013, 04:07 PM
ஆயிரம் தச்சர் அனுதினம் கூடியே
வாயில் அறையெலாம் வைத்தே வனமிகு
மண்டபம் கட்டவும் கண்டவன் கண்படக்
கொண்டதால் மான்-ஓடு போம். ... 3

தாமரை
03-10-2013, 04:53 AM
தேன் கூடு

ரமணி
03-10-2013, 11:40 AM
விடை சரியே. இது மிகவும் 'பாப்புலர்' விடுகதை யாயிற்றே? என் பங்குக்குக் கொஞ்சம் கண், மூக்கு வைத்தேன், அவ்வளவே.


தேன் கூடு

ரமணி
03-10-2013, 11:42 AM
ஒரு வேண்டுகோள்: யாரும் விடைகளை இணையத்தில் தேடுதல் கூடாது. அதற்காகத்தான் நான் விடையை மறைமொழியாக அமைத்துள்ளேன்.

கோட்டை அகலாதே கொள்ளுவான் சொல்லுவான்
வேட்கை அதிகரித்தால் வேட்டையே - ஏட்டிலே
இல்லாத சொல்லி இரைவான் அலறுவான்
பொல்லாத கூர்முனை ஊக்கு. ... 4

தாமரை
03-10-2013, 12:50 PM
நாக்கு??

ரமணி
03-10-2013, 03:19 PM
சரியே.


நாக்கு??