PDA

View Full Version : குறட்பாவில் விடுகதைகள்



ரமணி
30-09-2013, 10:52 AM
குறட்பாவில் விடுகதைகள்

தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம்.

விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம்.

1. வெண்பாவின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய வேண்டும்.

2. விடைச்சொல் சிதைவோ புணர்ச்சியோ உறாது அதுவாகவே அமைய வேண்டும். புணர்ச்சி தவிர்க்க முடியாத போது புணரும் எழுத்தை அடைப்புக் குறிகள் மூலமோ வேறு விதத்திலோ காட்டுதல் நலம்.

3. விடைச்சொல் மறமொழி யாவதால் அது மற்ற சீர்களுடன் இலக்கணத்தில் பொருந்தி நின்றாலும் பொருளில் பொருந்தாது நிற்குமாதலால் அதை இனங்கண்டு கொள்வது எளிதாகுமாறு அமைக்க வேண்டும்.

4. விடைச்சொல்லைப் பலவிதமான மறைமொழிகளில் (encryption) கூறலாம். எவ்வித மறைமொழி உத்தியாயினும் விடை எளிதில் காண முடிவதாக இருக்கவேண்டும்.

5. மறைமொழியும் பொருளுடன் அமைந்தால் விடை காணுவது சுவையான சிக்கலாக இருக்கும். பொருளில்லாதோ வேற்று மொழிச் சொல்லாகவோ அமைந்தாலும் தனித்து நின்று கண்பட்டு விடை காண வைக்கும்.

6. சில மறைமொழி உத்திகள்:
6.1. அதிக பட்சம் இரண்டு எழுத்துகளை மறையாக்கலாம், ஒற்றுகள் தவிர்த்து.

6.2. மறையாகும் எழுத்து விடையின் எழுத்தைச் சேர்ந்த இனமாக--குறிலெனில் குறிலாக, நெடிலெனில் நெடிலாக--இருக்கவேண்டும். அவ்வாறு வரும் குறில்/நெடில் தகுந்த முந்தைய அல்லது பின்வரும் எழுத்தாக அமைந்தால் விடைகாண எளிதாக இருக்கும். தள்ளியுள்ள எழுத்துகளாகவும் அமையலாம்.

உதாரணமாக, ’பட்டு’ என்னும் விடைச்சொல்லை முன்பின் அடுத்துள்ள எழுத்துகள் மூலம் ’நட்டு, மட்டு, மிட்டு’ என்று அமைக்கலாம். தள்ளி வரும் எழுத்துகள் மூலம் ’கட்டு, முட்டு, மொட்டு’ என்று அமைக்கலாம்.

6.3. விடைச்சொல்லின் எழுத்துகள் இடம் மாறியோ, ஒலி மாறியோ வரலாம். சான்று: ’சிவா’ என்பது ’வாசி’ அல்லது ’விசா’ என வரலாம்.

6.4. இரண்டு எழுத்துகளை மறைக்கும் போது ஒன்றின் மறை அருகில் வருவதாகவும் மற்றது தள்ளி வருவதாகவும் அமைக்கலாம். சான்று: ’பெண்மணி’ என்பதைத் ’தண்பணி’ எனலாம்.

6.5. வேறுவித உத்திகளைக் கையாளுவோர் அவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

*****

ரமணி
30-09-2013, 10:58 AM
மேலுள்ள விதிகளின் படி அமைக்கப்பட்ட குறட்பா விடுகதைகளை இரண்டிரண்டாக இந்த இழையில் அஞ்சலிடுகிறேன். அன்பர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு விடையைக் கண்டுபிடித்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் இரண்டு உதாரண விடுகதைகள்:

மேனியெலாம் கண்ணெழிலாள் சிக்கியோர் சீரழிப்பாள்
வீன்மலை யென்று விடை. ... 1

விடை: மீன்வலை; மறைமொழி: வீன்மலை (எழுத்துகளின் ஒலி மாறி வந்தது).

பசுவினம் ஒன்பது தாண்டினால் வந்து
இசித்திடும் ஈமத்து நின்று. ... 2

விடை: ஆபத்து; மறைமொழி: ஈமத்து (ஆ-வெழுத்தின் அடுத்த நெடில் ஈ; ப-வுக்கு ம. ஆ என்றால் பசு)

*****

இனி நீங்கள் விடைகளைப் பதியலாம்.

பார்க்கும் இரத்தினம் வண்ணம் கருமையாம்
பேரது பெண்பணி யென்று. ... 3

உறுகண்*ஓர் விந்தை உளம்சேர் அழகி
குறையும் வளரும் நிலை. ... 4
[உறுகண்=நோய்]

*****

தாமரை
01-10-2013, 02:03 AM
கண்மணி....

மதி??? நிலா.

ரமணி
01-10-2013, 03:07 AM
கண்மணி, நிலா என்பன சரி.


கண்மணி....

மதி??? நிலா.

இன்னும் சில:

மூன்றெழுத்து ஆடையில் மோகினியாய்த் தோன்றுவர்க்கு
ஈன்றெடுக்கும் பல்லுயிர் விட்டு. ... 5

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

காயாகும் முன்னர் கனியான வானவன்
சேயாம் களனி யிது. ... 8

காவியுடை யில்லாத் தவம்செய் துறவியாம்
வாவியுள் பக்கி யென. ... 9

தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10

*****

தாமரை
01-10-2013, 05:43 AM
இன்னும் சில:

மூன்றெழுத்து ஆடையில் மோகினியாய்த் தோன்றுவர்க்கு
ஈன்றெடுக்கும் பல்லுயிர் விட்டு. ... 5

பட்டு

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

நீர்

பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

கொசு

காயாகும் முன்னர் கனியான வானவன்
சேயாம் களனி யிது. ... 8

இளநீர்???

காவியுடை யில்லாத் தவம்செய் துறவியாம்
வாவியுள் பக்கி யென. ... 9

கப்பி ???

தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10

கத்திரிக்கோல்

*****[/QUOTE]

ரமணி
01-10-2013, 06:56 AM
முதல் மூன்றும் கடைசியும் சரியான விடைகள்.

வானவன் (தேவன்) என்ற குறிப்பிருப்பதால் விடை இளநீர் ஆக முடியாதல்லவா?

வாவியின் பொருள் நோக்கக் கப்பி தவறு எனத் தெரியும்.




இன்னும் சில:

மூன்றெழுத்து ஆடையில் மோகினியாய்த் தோன்றுவர்க்கு
ஈன்றெடுக்கும் பல்லுயிர் விட்டு. ... 5

பட்டு

அள்ளலாம் கொள்ளலாம் தள்ளலாம் விள்ளினாலும்
கிள்ளினாலும் கூடுவாள் யார்? ... 6

நீர்

பாடியது ராகம் பறந்தது தூக்கமே
நாடினால் கிட்டாப் பசு. ... 7

கொசு

காயாகும் முன்னர் கனியான வானவன்
சேயாம் களனி யிது. ... 8

இளநீர்???

காவியுடை யில்லாத் தவம்செய் துறவியாம்
வாவியுள் பக்கி யென. ... 9

கப்பி ???

தான்மட்டும் ஒட்டிக்கொள் வான்பிற வெட்டுவான்
யான்தரிக்கக் கோலாவான் யார்? ... 10

கத்திரிக்கோல்

*****[/QUOTE]

ரமணி
02-10-2013, 05:24 AM
விடைகள் (மறைமொழி அடைப்புக் குறிகளுக்குள்)
1. மீன்வலை (வீன்மலை) 2. ஆபத்து (ஈமத்து) 3. கண்மணி (பெண்பணி)
4. நிலா (நிலை) 5. பட்டு (விட்டு) 6. நீர் (யார்)
7. கொசு (பசு) 8. பழனி (களனி) 9. கொக்கு
10. கத்தரிக்கோல் (தரிக்கக் கோல்)

*****

ரமணி
02-10-2013, 05:35 AM
வெள்ளையாம் ஓடையுறு மீனோ கருநிறம்
துள்ளி விளையாடக் காண். ... 11

கருமையாய் வண்ணம் கலகலப் பேச்சு
ஒருபாடம் கூட்டுமே ஊர். ... 12

முற்றிலும் வெண்மையாம் மூன்றெழுத் துப்பெயராம்
பற்றினால் மென்மையில் மஞ்சு. ... 13

குதிரைய(து) ஓடக் குறையும் அதன்வால்
அதன்பெயர் காசிபால் என்று. ... 14

ஒன்பது பிள்ளைக்கும் ஒன்றே குடுமியாம்
என்பது மாண்பு விளர். ... 15
[விளர்=வெண்மை]

*****

தாமரை
02-10-2013, 06:11 AM
வெள்ளையாம் ஓடையுறு மீனோ கருநிறம்
துள்ளி விளையாடக் காண். ... 11

கண் - கண்மணி

கருமையாய் வண்ணம் கலகலப் பேச்சு
ஒருபாடம் கூட்டுமே ஊர். ... 12

காகம்

முற்றிலும் வெண்மையாம் மூன்றெழுத் துப்பெயராம்
பற்றினால் மென்மையில் மஞ்சு. ... 13

பஞ்சு

குதிரைய(து) ஓடக் குறையும் அதன்வால்
அதன்பெயர் காசிபால் என்று. ... 14

ஊசி நூல்

ஒன்பது பிள்ளைக்கும் ஒன்றே குடுமியாம்
என்பது மாண்பு விளர். ... 15
[விளர்=வெண்மை]

வெள்ளைப் பூண்டு
*****[/QUOTE]

ரமணி
02-10-2013, 04:14 PM
எல்லாம் சரியான விடை, தாமரை செல்வனே!

ரமணி
02-10-2013, 04:16 PM
வாலுடன் தோன்றிய பையன் வளர்கையில்
வால்போய்க் கவலையா னான். ... 16

பறந்திடும் ஆனால் பறவையல்ல நாட்டின்
சிறந்ததோர் சின்னம் விடு. ... 17

அம்மாபிள் ளைத்தாச்சி அப்பாவோ ஊர்சுற்றி
விம்முமவள் காதணி யே. ... 18

தனித்துண்ணக் கூடாது தானின்றி ஆகா
முனிவர் விலக்கிடும் தப்பு. ... 19

எட்டுக்கா லூன்றி யிருகால் படமெடுத்து
வட்டக் குடைபிடிக்கும் வண்டு. ... 20

*****

கீதம்
03-10-2013, 07:52 AM
வாலுடன் தோன்றிய பையன் வளர்கையில்
வால்போய்க் கவலையா னான். ... 16

தவளை

பறந்திடும் ஆனால் பறவையல்ல நாட்டின்
சிறந்ததோர் சின்னம் விடு. ... 17

கொடி

அம்மாபிள் ளைத்தாச்சி அப்பாவோ ஊர்சுற்றி
விம்முமவள் காதணி யே. ... 18

----------

தனித்துண்ணக் கூடாது தானின்றி ஆகா
முனிவர் விலக்கிடும் தப்பு. ... 19

உப்பு

எட்டுக்கா லூன்றி யிருகால் படமெடுத்து
வட்டக் குடைபிடிக்கும் வண்டு. ... 20

மாட்டு வண்டி?

தாமரை
03-10-2013, 08:53 AM
பூசணி

நண்டு...

மிச்சம் அக்கா சொன்னது சரி

ரமணி
03-10-2013, 11:29 AM
வணக்கம் கீதம் அவர்களே.

தவளை, கொடி, உப்ப சரி.

’காதணி’யில் மறைந்த இரு எழுத்துகளில் ஒன்றை விடுவித்தால்
’காசணி’ யாகும்.

’மாட்டு வண்டி’ என்பது நல்ல கற்பனை. ஆனால் விடை ’வண்டு’
போலுள்ள இன்னொரு ஜந்து. (அதைப் பற்றி இங்கு ஒரு சமையல் குறிப்பு பார்த்த மாதிரி ஞபகம்!)

ரமணி
03-10-2013, 11:32 AM
தாமரை செல்வன் சரியான விடைகளைக் கூறிவிட்டார். இனி அடுத்த இன்ஸ்டால்மென்ட்...

தொட்டுநாம் காணவே றோர்விழி நேர்காணும்
எட்டிநாம் காணா மெழுகு. ... 21

மரத்தின் உயரே மலைப்பாம் பெனவே
உரத்துடன் தொங்கும் கழுகு. ... 22

(இரு சொல் விடை)
உரசினால் பாம்புபோல் மூர்க்கமாய்ச் சீறும்
சிரசினை நோக்கச் சிலை. ... 23

(இரு சொல் விடை)
அம்மா படுத்திருப் பாள்மகளோ டித்திரிவாள்
அம்மா கிழவியா பார். ... 24

(இரு சொல் விடை)
விழமாட்டீர் கீழ்சாய்ந்தால் அஞ்சாநீர் கொம்போ
எழுந்தாலோ நிற்பதறி யீர். ... 25

*****

தாமரை
03-10-2013, 01:14 PM
21... தொட்டுப் பார்க்கலாம். வேறோருத்தரும் பார்க்கலாம். நம்மால எட்டிக் கூடப் பாக்க முடியாதா? ஹையா ஜாலி... முதுகு...

22. புடலங்காய் இல்ல... அது கொடியில் காய்க்கும், முருங்கை இல்ல.. அது கழுகுக்கு ஒத்து வரலை.. உ சௌண்ட்ல மரத்துல தொங்கற மூணெழுத்து என்னாங்கப்பா? ,,, விழுது???

23. உரசினால் சீறுமா? பென்ஸ் ஒரு முறைச் சொன்னாரு.. உரசாதே தீக்குச்சியே பற்றி எரியப் போவது நீதான் அப்படின்னு. ஆனா நோக்கச் சிலை -லை அதிகமா இருக்கே... சரியா ?

24. அம்மி.. குழவி...(மம்மி - குழந்தை பரவாயில்லை)

25 யோசிச்சிட்டு வர்ரேன்... (கம்பு போல இருக்கு...)

ரமணி
03-10-2013, 02:40 PM
21 முடல் 24 வரை சொன்ன விடைகள் சரியே.
மறைமொழிகளைக் கொஞ்சம் 'தைரியப் படுத்தி யிருக்கிறேன்'!

தாமரை
04-10-2013, 01:48 AM
25. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தஞ்சாவூர் பொம்மை..

நான் முதலில் ஊன்றுகோலையும் நாணலையும் எண்ணினேன்... ஒத்தும் வரலை அதே சமயம் மறைமொழி முதல் வரியில் இருப்பதால் இரண்டாம் வரியையே உத்துப் பார்த்து குழம்பிப் போயிட்டேன்

ரமணி
04-10-2013, 02:27 AM
ஹ ஹ ஹ... விடை சரியே. சமயத்தில் மிக எளிதாகி விடுவதால் இம்முறை விடைகள் அச்செழுத்தில் குறிக்கவில்லை.

ஈற்றடியில் விடை வராவிட்டால் இனி அச்செழுத்தில் குறிக்கிறேன்.



25. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தஞ்சாவூர் பொம்மை..

நான் முதலில் ஊன்றுகோலையும் நாணலையும் எண்ணினேன்... ஒத்தும் வரலை அதே சமயம் மறைமொழி முதல் வரியில் இருப்பதால் இரண்டாம் வரியையே உத்துப் பார்த்து குழம்பிப் போயிட்டேன்