PDA

View Full Version : வாழ்ந்தது என் குடியே !



M.Jagadeesan
25-09-2013, 02:07 AM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSGa0HyGkB1Kt5-Ri-RHKhN8NBlfl8dtjFEVc26zBcedtJfNUh3


நில்லாய் ! இளங்கொடியே ! உன்இடை ஒருபிடியே !
......நின்வாய் அமுதத்தை உண்பேன் ஒருபடியே !
வில்லாய் வளைந்திட்ட புருவத்தின் பேரழகில்
......விளைந்திட்ட காதலினால் வாழ்ந்தது என்குடியே !
எல்லே ! இளங்கிளியே ! உந்தன் தலைமுடியே !
...... எட்டடி நீண்டதனால் தொட்டது உன்அடியே !
சொல்லாய் மடப்பிடியே ! சொர்க்கத்தின் மறுஉருவே !
......சற்றேநான் கண்ணயர தருவாய் ! உன்மடியே !

மும்பை நாதன்
25-09-2013, 03:36 PM
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSGa0HyGkB1Kt5-Ri-RHKhN8NBlfl8dtjFEVc26zBcedtJfNUh3


நில்லாய் ! இளங்கொடியே ! உன்இடை ஒருபிடியே !
......நின்வாய் அமுதத்தை உண்பேன் ஒருபடியே !
வில்லாய் வளைந்திட்ட புருவத்தின் பேரழகில்
......விளைந்திட்ட காதலினால் கெட்டது என்குடியே !
எல்லே ! இளங்கிளியே ! உந்தன் தலைமுடியே !
...... எட்டடி நீண்டதனால் தொட்டது உன்அடியே !
சொல்லாய் மடப்பிடியே ! சொர்க்கத்தின் மறுஉருவே !
......சற்றேநான் கண்ணயர தருவாய் ! உன்மடியே !

நல்ல கவிதை தந்ததற்கு நன்றி.
ஐயா, ஒரு விண்ணப்பம்.
திரியின் தலைப்பை
" தருவாய் ! உன்மடியே ! "
என்று மாற்றி விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தயவு செய்து படைப்பாளியின் உரிமையில் தலையிடுவதாக எண்ணிவிட வேண்டாம்.

M.Jagadeesan
26-09-2013, 06:20 AM
மும்பை நாதனின் பாராட்டுக்கு நன்றி ! தங்கள் அறிவுரைப்படி கவிதையில் சிறு மாற்றம் செய்துவிட்டேன்.

மும்பை நாதன்
26-09-2013, 03:55 PM
மும்பை நாதனின் பாராட்டுக்கு நன்றி ! தங்கள் அறிவுரைப்படி கவிதையில் சிறு மாற்றம் செய்துவிட்டேன்.

இப்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது. மிக்க நன்றி.

கீதம்
27-09-2013, 02:58 AM
காதல்ரசம் தளும்பித் தெறிக்கும் கவிரசத்துக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
14-08-2014, 06:42 AM
கீதத்தின் பாராட்டுக்கு நன்றி !

அனுராகவன்
16-08-2014, 03:24 PM
அருமையாக உள்ளது நண்பா...