PDA

View Full Version : பிடிக்காதவளாக இருந்துவிட்டு போ...



kulirthazhal
24-09-2013, 10:27 AM
என்
கனவுகளின் கனவுகளில்
நிழலாய் அலையும்
பேசும் சிற்பங்கள்...
அது
கனவுகளின் கற்பனைகள்...
அதற்கென்றும்
பெண் சிற்பமே*
வடிக்கப்பிடிக்கிறது...

அழகாய் செய்ய
அத்தனை திசைகளிலும்
ஆர்வமாய் அலைகிறது...
ஆழமாய் விழுகிறது...
வேகமாய் சுழல்கிறது...

அலசாமல் கிடக்கின்ற
இலக்கிய புதையலையும்,
நிழல்மூடி மறைந்திருக்கும்
கவிஞனின் கற்பனையையும்,
களவாடி வருகிறது...

இளமையை
தசைகளைக்கொண்டு
மெழுக நினைக்கிறது..,
சுருக்கங்களை
காதல் மிகுந்த
வாயால் ஊதி
மெல்லிய அலைகளால்
மறைக்க நினைக்கிறது..,

கிட்டிய அழகுகளை
மொத்தமுமாய் சிற்பமாக்க
ஆழமாய்*
தவம்செய்து பார்க்கிறது..
சின்னதாய்
கண்திறந்து தேடுகிறது..,
எவனாவது
பேசிக்கொள்ளும்
அழகான வார்த்தைகள்
காதில்விழ ஏங்குகிறது...
கற்பனைகள்
வற்றிப்போனதாய்*
கண்ணீர்விடுகிறது...
கடவுளை
துணைவர
தேடுகிறது...

அசந்துபோய் அமர்கிறது
அழகாய்கிடைத்த
அத்தனை பாகங்களையும்
குப்பையாய் கொட்டிவிட்டு...

விழிகள் சோர்ந்து
ஓரப்பார்வையால்
சோகமாய் பார்க்கிறது
என்னை...

எனக்கும் அதற்கும்
தெரியும்
இதுதான்
வழக்கமென்று...

மீண்டும் ஒருமுறை
கற்பனைகள் திரட்டிவந்த
குப்பைகளை கிளறினேன்...
மெதுமெதுவாய்
அழகழகாய்
எடுத்தேன்
தொடுத்தேன்...

ஆயிரமாவதுமுறையும்
அவளே
வந்தாள்....

கற்பனை
அகங்காரமாய்
ஆர்ப்பரித்து சிரித்தது...
நான்*
அழத்தொடங்கினேன்...........

- குளிர்தழல்

( விழிகளை துடைத்தபடி
கோபமாய் கத்தினேன்..,
எனக்கு
பிடிக்காதவளாக இருந்துவிட்டு போ... )

பென்ஸ்
01-10-2013, 05:37 PM
நீ எதை தேடுகிறாயோ அதுவே கிடைக்கும்...
(சில குப்பைகளை கிளறின தேடாததும் கிடைக்கும்.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்)...


பிடித்திருந்தாலும், பிடிக்காமலிருந்தாலும்... ஒரு முறை பிடித்து போயிட்டா... இப்படிதான்...