PDA

View Full Version : பழைய புகைப்படம்! - புதுக்கவிதை



agniputhiran
09-09-2013, 03:21 AM
பழைய புகைப்படம்!


கண்ணில் பட்டது
பழைய புகைப்படம் ஒன்று!

அழகிய ஆலமரம் ...
அருகில் வரிசை வரிசையாய்
ஊழியர்களும் நிர்வாகிகளும்!

உற்றுப் பார்த்தேன்...
அழகாகச் சிரித்துக்கொண்டு சிலர்!
ஆணவமாய்ப் பார்த்துக்கொண்டு பலர்!

ஓ! இந்தக்காலங்கள்தான் எத்தனை
கணப்பொழுதில் கரைந்து விட்டன!

புகையானோர் பாதி!
புதையுண்டோர் மீதி!

ஆனால்...
புதிய விழுதுகளுடன்
ஆலமரம் மட்டும் இன்றும் கம்பீரமாக...!

- அக்னிபுத்திரன்.

கீதம்
11-09-2013, 05:43 AM
ஆள் வீழ்ந்தாலும், தான் வீழாது விழுது விட்டு நிழல் தந்து வாழும் ஆல் நின்ற நிழற்படமும் அதனால் விளைந்த கவிதையும் மனம் கொள்ளை கொண்டன. பாராட்டுகள் அக்னிபுத்திரன்.

நாஞ்சில் த.க.ஜெய்
12-09-2013, 05:13 PM
ஆலம்விழுதாய் நினைவுகள் ஆழபுதைந்தாலும் காணும் காண பொழுதில் உதித்திடும் நினைவு துளிகளாய் ... இடைவெளி அதிகம் ஆனால் கவிதை கணம் அதிகம் ..

கும்பகோணத்துப்பிள்ளை
13-09-2013, 09:31 PM
நினைவின் விழுதுகள்
நெஞ்சில் விழுந்ததில்
கொஞ்சம் கனமான கவிதை
நெஞ்சம் கனமான கவிதை