PDA

View Full Version : பரிணாம வளர்ச்சி இது



agniputhiran
08-09-2013, 04:27 AM
பரிணாம வளர்ச்சி இது!

வணிக மூலதனம்
வீழ்ந்து வரும் மதிப்பு
ஒவ்வொரு வினைக்கும்
ஒரு எதிர்வினை உண்டு!

கொள்கை நெறி பிறழாதவர்
மேலாண்மையில் வல்லவர்

எல்லாம் இருந்தும்
சில வேளைகளில்
மயான அமைதி நம்மை
மாய்த்து விடும்! சாய்த்தும் விடும்!

கீழே விழுவது
மேலே எழுவதற்கே!
மானிடவியல் கோட்பாட்டின்
பரிணாம வளர்ச்சி இது!

-அக்னிப்புத்திரன்

சிவா.ஜி
08-09-2013, 02:53 PM
அதீத மௌனம் ஆபத்தாய்கூட முடியும்...ஆனால் ஆபத்து நாட்டு மக்களுக்குத்தான்...அன்னையின் பிள்ளைகளுக்கு அல்ல. பார்ப்போம் விழுந்தது எழுந்ததா எனக் காலம் சொல்லட்டும்.

நம்பிக்கையோடு வந்த வரிகளுக்கு வாழ்த்துக்கள் அக்னிபுத்திரன்.