PDA

View Full Version : பெயர்க் குழப்பம்....



arun karthik
07-09-2013, 06:51 PM
கிழமை & நேரம் : ஞாயிறு காலை 11 மணி

"படாரென்று கதவை அடித்தவாறேஅவரது வீட்டிற்கு உள்ளே வந்தார் மேனேஜர் கணேஷ். என்னய்யா ஆளுங்க இவங்க. அடுத்த மாசம் வேலைய முடிக்கணும்; இவ்வளவு மெதுவா வேலை செய்யறாங்க. இருக்கட்டும், சொன்ன நேரத்துல டெலிவரி ஆகல, இவங்க போனஸ்ல கைய வச்சிடறேன். அப்பத்தான் புத்தி வரும்", சே! என்று சீறியவாறே கைபேசியை எடுத்தார்.

அப்போது அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. "டேய் மச்சி. வாடா டீ குடிச்சிட்டு வரலாம்",என்று அவருக்கு கீழே வேலை செய்யும் ரமேஷ் அனுப்பியிருந்தார். மேனேஜரோ கோபப்பட இடம் வைக்காமல், உடனே அடுத்த குறுஞ்செய்தி அவரிடமிருந்தே வந்தது, "மன்னிக்கவும், என் நண்பன் கணேஷ்க்கு அனுப்பறதுக்கு பதிலா, உங்களுக்கு அனுப்பிட்டேன்".

கைபேசியை கீழே வைத்து விட்டு வளர்பிறை நிலவாய் கோபம் அடைய ஆரம்பித்தார்.கோபமது பௌர்ணமியாக மாறிய உடன் மீண்டும்
கை பேசியை எடுத்து ரமேஷுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

கணேஷ்: உனக்கு கண்ணும் இல்லை. நிச்சயம் நீ செய்யும் வேலையில் கவனமும் இருக்காது.

ரமேஷ்: நான் எந்த தவறும் செய்யவில்லையே..

கணேஷ் : என்னிடமே பொய் பேசுகிறாயா? உனக்கு போனஸ் கிடையாது.

ரமேஷ் : நான் தான் பொய் பேசவில்லையே...

கணேஷ் : அகம்பாவம் பிடித்தவனே உனக்கு இன்க்ரிமென்ட் கிடையாது...

ரமேஷ் : அனால் நான் மிகவும் பணிவுடன் தானே பேசுகிறேன்...

கணேஷ் : நான் நினைத்தால் உனக்கு வேலையே இல்லாமல் செய்து விடுவேன்...

ரமேஷ் : மன்னிக்கவும். அந்த அளவுக்கு உங்களை கோபப்படுத்தும் விதமாக நான் ஒன்றும் செய்யவில்லையே..

கணேஷ் : ஒன்றும் செய்யவில்லையா? எவ்வளவு தைரியம் இருந்தால், வேறொரு கணேஷுக்கு பதில், எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவாய்? செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், இவ்வாறு உன் நண்பன் கணேஷுக்கு பதில் எனக்கு அனுப்புவாயா? ஒரு குறுஞ்செய்தி கூட உருப்படியாக அனுப்பத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்கு வேலை? பேசாமல் வேலையை விட்டு விட்டு போய் விடு ரமேஷ்...

ரமேஷ்: முட்டாள்! நான் உன் சீனியர் மேனேஜர் ரமேஷ். முதலில் ஒழுக்கமாக நீ உன் ஜூனியர் ரமேஷுக்கு செய்தி அனுப்பு....

கணேஷ்: ???!!!??? (கோபம் பௌர்ணமியிலிருந்து அமாவசையாய் மாறி விட்டது!!!)

சிவா.ஜி
08-09-2013, 01:58 PM
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. நிறைய விஷயங்களை நேரில் பேசாததால்....பல விஷயங்களில் நாம் இழப்பை சம்பாதிக்கிறோம்.

வாழ்த்துக்கள் கார்த்திக்.

ஓவியன்
10-09-2013, 01:04 PM
ஹா, ஹா..!!

அவ்வப்போது இது போன்ற தவறான தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுவது என்னவோ உண்மைதான்..!! :)

வாழ்த்துகள் அருண் கார்த்திக்..!!

மும்பை நாதன்
10-09-2013, 04:59 PM
ஒரே பெயரில் பலர் இருப்பதால் இது போல நிஜ வாழ்வில் கூட நடப்பது சாத்தியமே.

முக்கியமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் குறுஞ்செய்தி வசதியை பயன் படுத்துவதோடு, எந்த காரணத்தை முன்னிட்டும் பிறர் மனம் நோகச்செய்யும் கருத்துக்களை குறுஞ்செய்தி மூலம் பரிமாறிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.

பதிவுக்கு நன்றி

மும்பை நாதன்

கீதம்
11-09-2013, 04:59 AM
மனம் ஒருநிலையில் இல்லாதபோது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை கூறுவதுமாக இருந்து, ஒரு பிரச்சனை பல பிரச்சனைகளுக்கு வித்தாகிவிடும். அதுவே சற்று நிதானமாக யோசித்தால் எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும்.

சொன்ன நேரத்தில் வேலை முடியவேண்டுமே என்ற பதைப்பில் இருக்கும்போது வந்த குறுஞ்செய்தி கணேஷை எரிச்சலூட்டியதில் தவறில்லை. ஆனால் கணேஷ் அந்த சூழலை நிதானமாக கையாண்டிருக்கவேண்டும். உண்மையிலேயே அது தொழிலாளியாயிருந்தாலும் அந்த நேரத்தில் கோபத்தைக் காட்டக்கூடாது.

தொழிலாளர்கள் ஒன்றுகூடி வேலை நிறுத்தம் என்று போராட்டத்தைத் துவங்கிவிட்டால் உள்ளதும் போய்விடுமே. எனவே எந்த சூழ்நிலையிலும் நிதானம் அவசியம். நல்ல பாடம்தான். இனி எச்சரிக்கையாயிருப்போம் எல்லோருமே. சுவையான கதைக்குப் பாராட்டுகள் அருண் கார்த்திக்.