PDA

View Full Version : எச்சரிக்கை

இராஜிசங்கர்
06-09-2013, 11:27 AM
http://1.bp.blogspot.com/-aRXRpaTcklo/TdEZuL2wdgI/AAAAAAAADOA/l-jOZjV6LZw/s1600/young+pretty+girl+umbrella+rain+srinking.jpg

மழையை
நேசிக்கிறேன்
கையில்
குடையுடன்..

சிவா.ஜி
08-09-2013, 02:03 PM
அழகான படம்.

நான்கு வரிகளில் இன்றைய உலகின் வாழ்க்கைமுறையை சொன்னக் கவிதை “நச்”

வாழ்த்துக்கள் தங்கையே.

கீதம்
11-09-2013, 05:37 AM
மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.

இராஜிசங்கர்
11-09-2013, 10:05 AM
அழகான படம்.

நான்கு வரிகளில் இன்றைய உலகின் வாழ்க்கைமுறையை சொன்னக் கவிதை “நச்”

வாழ்த்துக்கள் தங்கையே.

நன்றிண்ணா...

இராஜிசங்கர்
11-09-2013, 10:06 AM
மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.

சூப்பர்க்கா..

நாஞ்சில் த.க.ஜெய்
12-09-2013, 04:53 PM
நேசிக்கும் மழையினை வெறுத்திடும் உடலுடன் மோதி வீழ்ந்த மனம் குடைபிடித்து ரசிக்கிறது ..

கும்பகோணத்துப்பிள்ளை
13-09-2013, 08:56 PM
மெல்லிய அத்துமீறல் என்றும் சுகம்!
உடை நனையாதிருக்க ஒரு கையில் குடை
தூறும் மழையால் ஊறும் மகிழ்ச்சியை உள்வாங்க
அத்துமீறி நீளும் மறுகை!

எச்சரிக்கை நிதர்சனம்!

தாமரை
18-09-2013, 11:45 AM
பெண்கள் எப்பவுமே இப்படித்தான்..
முத்தமிட நான் கேட்டபோதும்
அவள் கையைத்தானே நீட்டினாள்!!!

மும்பை நாதன்
02-10-2013, 02:57 PM
மந்தமிட்ட வானம் பார்த்து மனத்துக்குள் குடைய
கிளம்பும்போதே கையில் திணித்துவிட்டாள் குடையை!
அன்புமழையில் சொட்டச் சொட்ட நனைக்கும் தாயவளுக்கு
வான்மழை மகளை நனைப்பது மாத்திரம் நட்டமாம்!

சாரல் வடிவிலும் சன்னமாய்த் தொடவும் விடாது
சரசரவென்று அடைக்கிறாள் சன்னல்களை!
மழை ரசிக்கும் மனம் அவளுக்குமிருக்கலாம்,
மழை நனைக்கும் ஆவல் அவளுள்ளுமிருக்கலாம்.

வீட்டுவேலைகளை விசிறியடித்துவிட்டு
கொட்டுமழையில் சுற்றிச்சுழன்றாட
உள்ளுக்குள்ளொரு உத்வேகம் எழுந்திருக்கலாம்,

எல்லாவற்றையும் மறைத்தபடி வேலையில் மூழ்குகிறாள்,
பின்னாளில் தேவையென்றே பெண்ணையும் பழக்குகிறாள்.
கையில் குடையுடன் மழைநேசிக்கும் கலைபோல்
வாழ்க்கையில் எதிலும் எச்சரிக்கை கற்றுத்தருகிறாள்.

மனத்தின் உள்ளேயே புகுந்து பார்த்தது போல் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்
02-10-2013, 03:02 PM
http://1.bp.blogspot.com/-aRXRpaTcklo/TdEZuL2wdgI/AAAAAAAADOA/l-jOZjV6LZw/s1600/young+pretty+girl+umbrella+rain+srinking.jpg

மழையை
நேசிக்கிறேன்
கையில்
குடையுடன்..

அருமையான பதிவுக்கு நன்றி.
பின்னூட்டத்தில் ஒரு நல்ல கவிதையை (கீதம்) தர தூண்டியதற்காக கூடுதல் நன்றி.

ஜான்
05-10-2013, 02:05 AM
அழகு!

எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்

ஜான்
05-10-2013, 02:06 AM
அழகு!

எதிலும் அமிழ்ந்து விடாமல் வெளியிலிருந்து
பார்த்து ரசிக்கக் கற்றுக் கொண்டால்
மழை மட்டுமல்ல வாழ்க்கையும் அழகுதான்