PDA

View Full Version : பரிசு



இராஜிசங்கர்
06-09-2013, 11:25 AM
வெளிச்சத்தை ரசிப்பாயென
மெழுகுவர்த்தி பரிசளித்தேன்
நீயோ
உருகும் அதன் இயல்புக்காக
வெறுக்கிறாய்!

கீதம்
11-09-2013, 06:08 AM
கண்ணே...

பளிங்கு போல் மின்னும் உன் கண்களிருக்க
வெளிச்சத்துக்கு வேறு உபகரணம் எதற்கு என்கிறாரோ?

இருந்தாலும் ஒளி உமிழ்ந்து தான் உருகும் மெழுகைக் கண்டு தானும் மனம் உருகாமல் வெறுப்பது சரியல்லதான். கவி நன்று. பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
11-09-2013, 10:02 AM
நன்றிக்கா..

நாஞ்சில் த.க.ஜெய்
12-09-2013, 04:48 PM
அழியும் உடலில் வெளிச்சம் கொண்டு அணையும் வேளையில் உரைக்கிறது உண்மை ...இதனை அறிந்ததால் வெறுக்கிறாளோ ?..கவிதை நன்று ..

இராஜிசங்கர்
13-09-2013, 05:04 AM
நன்றிங்க சார்

கும்பகோணத்துப்பிள்ளை
13-09-2013, 08:36 PM
கருகும் திரிக்கெல்லாம்
தன்னைக்கட்டியிருக்கும் மெழுகின்மேல்
வெறுப்பிருந்தால் அது
நியாயந்தானே!

மெழுகாய் நீயிருப்பதால்தானே
திரியாய் நான்கருகிறேனடி
என்கிறாரோ உங்களவர்!

உருகும் கவிதை பெருகட்டும்!

இராஜிசங்கர்
14-09-2013, 05:53 AM
நன்றி கு.கோ.பி

மும்பை நாதன்
02-10-2013, 03:22 PM
வெளிச்சத்தை ரசிப்பாயென
மெழுகுவர்த்தி பரிசளித்தேன்
நீயோ
உருகும் அதன் இயல்புக்காக
வெறுக்கிறாய்!

பரிசு என்பது எரிந்து பயன் தந்து அழிந்து போகாமல்
இருந்து உளம் கவர்ந்து நினைவை மகிழ்த்துவதாய் இருக்க வேண்டுமோ ?

ஜான்
05-10-2013, 02:03 AM
உருகும் அதன் இயல்பு அளிக்கும் வெம்மை வெறுக்க வைத்திருக்கலாம் !!
வெம்மையற்ற வெளிச்சம் கிட்டுவது அரிதுதான்