PDA

View Full Version : பயணிக்கிறோம் மெளனமாய்!



agniputhiran
05-09-2013, 12:32 PM
பயணிக்கிறோம் மெளனமாய்!

மாறிடும் இலக்கு…
மாற்றியவர் யாரோ?
வெளிச்சம் தரும் விளக்குகளா?
மின்மினிப் பூச்சிகளா?
பண்டங்கள் யாவும் பழுது!
பாத்திரங்களோ முற்றிலும் புதிது!
சமைக்கும் பணி சிலருக்கு
சாப்பிடும் பணி பலருக்கு…
விலை போகுமா?
உலை வேகுமா?
சரிவை நோக்கி
பயணிக்கிறோம் மெளனமாய்!

-அக்னிப்புத்திரன்

சுகந்தப்ரீதன்
13-09-2013, 09:52 AM
சமதளத்தில் சாத்தியப்படுவதில்லை எந்தவொரு பயணமும்... ஏற்றமும் இறக்கமும் எந்நாளும் இரண்டற கலந்தே பயணிக்கிறது... சரிவோ சிகரமோ எளிதில் எவராலும் கணித்துவிடவும் முடிவதில்லை... மௌன பயணத்தின் மகிமைகளை..!!

உயிரோட்டமுள்ள கவிதைக்கு வாழ்த்துக்கள் அக்னிபுத்திரன்... தொடர்ந்து எழுதுங்கள்..!!:icon_b: