PDA

View Full Version : என் சுவாசம் .....



திவ்யா
03-09-2013, 06:27 AM
உன் நினைவுகளுடன் கழிக்கும் பொழுதுகள்
நிஜங்களை விட சுகமானது
ஏனென்றால்,
உன் தரிசனம் சில நொடிகள்தான்
நினைவுகளோ.......
என் சுவாசம் இருக்கும் வரை!

Rathana Sabapathy
04-09-2013, 05:23 PM
நினைவுகள் அழிவதில்லை!
நினைவுகள் என்றும் நெஞ்சோடு!
கவிதை அருமை!..

கீதம்
05-09-2013, 08:31 AM
நிஜம் சில சமயங்களில் சுடுவதும் உண்டு. நிழல் என்றும் இதமே. ஆனாலும்....

நொடிகளில் கிடைக்கும் தரிசனங்கள்தாம் வாழ்நாள் முழுமைக்குமான நிழற்படமாய், நினைவுப்படலமாய் மனத்தில் படிகின்றன.

நிஜமும் நிஜத்தின் நிழலாய் நினைவுகளும் இணைந்திருக்கும் வாழ்க்கையே இனித்திருக்கும் காலமெல்லாம்.

அழகான கவிதை. பாராட்டுகள் திவ்யா.

lenram80
01-10-2013, 07:09 PM
நீ வெடித்தது ஒரு முறை தான்!
நான் இன்னும் பிரபஞ்சமாய் விரிந்து கொண்டே இருக்கிறேன்!

மும்பை நாதன்
02-10-2013, 06:09 AM
விதையை விட விருட்சம் பெரிதுதான்
நிஜத்தை விட நினைவுகள் பெரிதுதான்
ஆனால்
விதையின்றி விருட்சமில்லை
நிஜமின்றி நினைவுகள் இல்லை !

பகிர்வுக்கு நன்றி, திவ்யா.

ஆர்.ஈஸ்வரன்
07-10-2013, 02:17 PM
நன்று