PDA

View Full Version : சூரியப்பொத்தல்கள்....!!!

சிவா.ஜி
20-08-2013, 08:16 AM
வெயிலை தடுக்க வழியின்றி
வெளிச்சத்தை வழியவிடும் மேற்கூரை
ஓலை மாற்ற வேண்டும்
காசில்லை...கடன் கொடுக்க ஆளில்லை
ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்....அடுத்த வாரம்
அடைத்துவிடலாம் சூரியப்பொத்தல்களை....!!!

த.ஜார்ஜ்
21-08-2013, 02:21 PM
வளைகுடாவில் அப்படிதான் இருக்கும். Ac பொட்டுக்குறதில்லையா? :lachen001:

சிவா.ஜி
21-08-2013, 02:49 PM
வளைகுடாவுல குடிசை எங்கண்ணே இருக்கு? இப்பதான் ஊர்லருந்து திரும்ப வந்தேன்...ஆடிக்காத்தை அனுபவிச்சுட்டு வந்தேன்....அதான்...இப்படி...ஹி..ஹி...!!!

தாமரை
22-08-2013, 03:54 AM
வெயிலை தடுக்க வழியின்றி
வெளிச்சத்தை வழியவிடும் மேற்கூரை
ஓலை மாற்ற வேண்டும்
காசில்லை...கடன் கொடுக்க ஆளில்லை
ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்....அடுத்த வாரம்
அடைத்துவிடலாம் சூரியப்பொத்தல்களை....!!!

ஏழைகள் வீட்டில் அத்துமீறல்
"சூரியனுக்கு" இது வழக்கம்தானே!!!

ஓட்டை மாற்றித் தடுக்க எண்ணமில்லையோ??
ஓலைகள் (மனுக்கள்,கடிதங்கள்) சூரியனை அடக்க "கை" கொடுப்பதுமில்லை !!

(ஆடிக் காத்து - தேர்தல் அலை ; அடுத்த ஊர் கருப்பு - கருப்புப்பணம் அல்லது விஜய்காந்த் --- ஹா ஹா ஹா)

சிவா.ஜி
22-08-2013, 09:09 AM
ஓலையும் “இலை”தானே...”சூரியனை”த் தடுக்குமல்லவா....?

தாமரை
22-08-2013, 10:44 AM
பிரச்சனையே ஓலையில் ஆயிரம் ஓட்டைகள் இருப்பதுதானே சிவா.ஜி!!!!

சிவா.ஜி
22-08-2013, 11:35 AM
உண்மைதானுங்கோ....!!!

கீதம்
23-08-2013, 11:14 AM
அன்றாடங்காய்ச்சி வாழ்க்கையின் அவலத்தை எடுத்தியம்பும் கவிதை. அடுத்த வார நம்பிக்கைகளோடு ஆண்டுகளைக் கடத்திவிடும் அதிசயம்!

\\ஆடிக்காத்தும் அடுத்த ஊர் கருப்பும்
ஆதரித்தால்..\\

இயலாமையின் கோரிக்கைகள் செல்லுபடியாகுமா? கருணையின்றி யாவும் தள்ளுபடியாகுமா?

சூரியப்பொத்தல்கள் - சுள்ளென்று சுடுகிறது மெய்!

மீள்வருகைக்கும் சிறப்பான கவிதைப்படைப்புக்கும் பாராட்டுகள் சிவாஜி அண்ணா.

கீதம்
23-08-2013, 11:16 AM
ஏழைகள் வீட்டில் அத்துமீறல்
"சூரியனுக்கு" இது வழக்கம்தானே!!!

ஓட்டை மாற்றித் தடுக்க எண்ணமில்லையோ??
ஓலைகள் (மனுக்கள்,கடிதங்கள்) சூரியனை அடக்க "கை" கொடுப்பதுமில்லை !!

(ஆடிக் காத்து - தேர்தல் அலை ; அடுத்த ஊர் கருப்பு - கருப்புப்பணம் அல்லது விஜய்காந்த் --- ஹா ஹா ஹா)

ரசிக்க வைத்தப் பின்னூட்டம். அன்றாடங்காய்ச்சியின் வாழ்க்கையில் அரிசிக்கு இடமில்லை என்றாலும் அரசியலுக்கு கட்டாயம் இடமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வரிகள். பாராட்டுகள் தாமரை அவர்களே.

சிவா.ஜி
25-08-2013, 07:27 AM
மிக்க நன்றிம்மா கீதம்.

கும்பகோணத்துப்பிள்ளை
30-08-2013, 03:04 AM
ஏழைகள் வீட்டில் அத்துமீறல்
"சூரியனுக்கு" இது வழக்கம்தானே!!!

ஓட்டை மாற்றித் தடுக்க எண்ணமில்லையோ??
ஓலைகள் (மனுக்கள்,கடிதங்கள்) சூரியனை அடக்க "கை" கொடுப்பதுமில்லை !!

"அம்மா" இதிலும் அரசியலா "தாமரை" ஜயா!

தாமரை
30-08-2013, 05:40 AM
"அம்மா" இதிலும் அரசியலா "தாமரை" ஜயா!

ஐயா கூட அரசியல்தான்...

தாமரை
30-08-2013, 05:40 AM
"அம்மா" இதிலும் அரசியலா "தாமரை" ஜயா!

ஐயா கூட அரசியல்தான்...

தாமரை
30-08-2013, 05:45 AM
ஏழைகள் வீட்டில் அத்துமீறல்
"சூரியனுக்கு" இது வழக்கம்தானே!!!

ஓட்டை மாற்றித் தடுக்க எண்ணமில்லையோ??
ஓலைகள் (மனுக்கள்,கடிதங்கள்) சூரியனை அடக்க "கை" கொடுப்பதுமில்லை !!

(ஆடிக் காத்து - தேர்தல் அலை ; அடுத்த ஊர் கருப்பு - கருப்புப்பணம் அல்லது விஜய்காந்த் --- ஹா ஹா ஹா)

ரசிக்க வைத்தப் பின்னூட்டம். அன்றாடங்காய்ச்சியின் வாழ்க்கையில் அரிசிக்கு இடமில்லை என்றாலும் அரசியலுக்கு கட்டாயம் இடமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வரிகள். பாராட்டுகள் தாமரை அவர்களே.

எப்படி அது மறைந்து இருந்ததோ அப்படி அரசியல் எங்கும் மறைந்திருக்கிறது கீதமக்கா!!!