PDA

View Full Version : சுவாசம் சுகவாசமானது....!!!

சிவா.ஜி
20-08-2013, 08:06 AM
நேற்றுவரை
என்வாசம் மட்டுமே சுமந்து வந்த
என் மூச்சு...
உன் வாசம் உள்ளத்தில் தொடங்கியதும்
பெண்வாசம் சுமந்து வருகிறது
உன்வாசம் வெளிவந்து
என் வாசத்தை அழைத்துக்கொண்டு
உள்சென்று திரும்ப
நம் வாசமாய் வெளிப்படுகிறது
சுவாசம் சுகவாசமானது...காரணம்
உன் அகவாசம்...!!

lenram80
24-09-2013, 04:22 PM
என்னடா... காரணமே இல்லாமே ஏதோ வாடை வருதேன்னு இருந்தேன். இப்ப தான் புரியுது அது சிவாஜியின் கவிதை வாசனைன்னு...

மும்பை நாதன்
24-09-2013, 05:11 PM
அவகாசம் எடுத்து வாசித்து
சவகாசமாய் படித்ததை நேசித்து
இம்மன்ற சகவாசம் எண்ணி பூரித்து
உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.

கீதம்
27-09-2013, 02:54 AM
வசப்பட்ட மனத்தைப் பற்றி வசப்பட்ட மனத்தால் வாச வரிகள் கொண்டு வசீகரிக்கும் கவிபடைத்தமைக்குப் பாராட்டுகள் அண்ணா.

சுவாசத்தை சுகவாசமாய் மாற்றிய பெண்வாசம் என்றும் உள்ளத்தில் நேசமாய் வாசம்கொண்டிருக்க வாழ்த்துக்கள்.

கீதம்
27-09-2013, 02:55 AM
வசப்பட்ட மனத்தைப் பற்றி வசப்பட்ட மனத்தால் வாச வரிகள் கொண்டு வசீகரிக்கும் கவிபடைத்தமைக்குப் பாராட்டுகள் அண்ணா.

சுவாசத்தை சுகவாசமாய் மாற்றிய பெண்வாசம் என்றும் உள்ளத்தில் நேசமாய் வாசம்கொண்டிருக்க வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
29-09-2013, 01:36 PM
என்னடா... காரணமே இல்லாமே ஏதோ வாடை வருதேன்னு இருந்தேன். இப்ப தான் புரியுது அது சிவாஜியின் கவிதை வாசனைன்னு...
ரொம்ப நன்றி லெனின். காதல் கவிதைகளின் மன்னனிடமிருந்து கிடைத்த பாராட்டுகளுக்கு நன்றி.

சிவா.ஜி
29-09-2013, 01:37 PM
அவகாசம் எடுத்து வாசித்து
சவகாசமாய் படித்ததை நேசித்து
இம்மன்ற சகவாசம் எண்ணி பூரித்து
உங்கள் கவிதைக்கு என் பாராட்டு.

கவிநயத்துடனான பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி நாதன்.

சிவா.ஜி
29-09-2013, 01:40 PM
என் அகவாசத்தை சுகவாசமாக்கிக்கொண்டவளால்...என் சுவாசமே வாசமானது.....அவளே சுவாசமாய்..இருப்பதால்...என்றுமே நேச வாசம் வீசிக்கொண்டே இருக்கும்.

நன்றிம்மா கீதம்.