PDA

View Full Version : காதல் சடுகுடு -2



rema
13-08-2013, 04:14 AM
களவும் கற்று
மறந்திட்டானோ ?
முன்பு எனது
பொழுதுகளை கடத்தியவன் !
தேங்கி கிடக்கிறோம்...
நானும் , நேரமும் !

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 02:09 AM
அருமையான வெளிப்பாடு
ஏக்கங்கள் தொடரட்டும்
ஊக்கப்படுத்துகிறோம்
நாங்கள்!

lenram80
24-09-2013, 04:24 PM
இல்லை...
அடுத்த களவுக்குப் போய்விட்டானோ என்னவோ?

மும்பை நாதன்
24-09-2013, 05:17 PM
களவும் கற்று
மறந்திட்டானோ ?
முன்பு எனது
பொழுதுகளை கடத்தியவன் !
தேங்கி கிடக்கிறோம்...
நானும் , நேரமும் !

கடத்தல் காரனை கடத்தியவன்
என் கண்ணில் பட்டால் கையோடு ஒப்படைக்கிறேன் உங்களிடம்.

கீதம்
27-09-2013, 02:50 AM
தேங்கிக் கிடக்கும் மனத்தின் ஏக்க வெளிப்பாட்டுச் சிந்தனை அருமை. ரசித்தேன். பாராட்டுகள் ரேமா.