PDA

View Full Version : அவர் - ஆண்களைக் குறிப்பதா? இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா?

arun karthik
09-08-2013, 06:27 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம்,

"அவர்" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை "அவன்" "இவன்" என்றும்,
பெண்களை "அவள்" "இவள்" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். "அவர்" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பயன்படுத்தலாமா? ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன? எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.

முன்கூட்டிய நன்றிகள்...

ரமணி
09-08-2013, 06:57 AM
அவர்
அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
http://agarathi.com/index.php

மன்ற நண்பர்களுக்கு வணக்கம்,

"அவர்" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை "அவன்" "இவன்" என்றும்,
பெண்களை "அவள்" "இவள்" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். "அவர்" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பயன்படுத்தலாமா? ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன? எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.

முன்கூட்டிய நன்றிகள்...

சுகந்தப்ரீதன்
09-08-2013, 07:11 PM
அவர் - பொதுப்பால்

கும்பகோணத்துப்பிள்ளை
10-08-2013, 04:30 AM
அவர்
அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

சரிதான் ஜயா
ஆனால் வழக்கத்தில் இந்த சுட்டு 'அய்யா அவர்கள்" என்றும் 'அம்மா அவர்கள்" என்று சேர்த்து பால்பிரித்தே சொல்லப்படுகிறது.
'ஏய் அவரக்கூப்பிடு" என்று ஆண்களைச்சுட்டுவதையும் "ஏம்பா (அந்த அம்மாவ) அவுங்கள கூப்பிமடு" என்று பெண்களைக்ச்சுட்டுவதையும் சாதாரனமாகக் காண்கிறோம்.

arun karthik
07-09-2013, 07:11 PM
எனது ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.. கும்பகோணத்துப்பிள்ளை கூறிய அதே காரணம்தான் எனக்குள் இந்த ஐயத்தை தோற்றுவித்தது. அதற்கு ஏற்றார்போல் http://ta.wiktionary.org/wiki/அவர் இந்த பக்கமும் என்னை சற்று குழப்பி விட்டது. நான் ரொம்ப சீக்கிரம் reply பண்ணிட்டேன்னு நினைக்கறேன் :aetsch013:

எல்லோரும் நண்பர்களே
08-09-2013, 01:04 PM
"அவர்" ஆணிர்க்கும் பெண்ணிர்க்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்.

ஜான்
08-09-2013, 01:12 PM
அவர்கள் என்பது பன்மை?
அவர்களே என்று அழைப்பது எப்படி வந்தது என்று விளக்குங்களேன்
மரியாதைப் பன்மை அல்லது திராவிட மேடை வழக்கமா?

vivek viswakarma
23-03-2014, 05:42 PM
அவர் என்பது பொதுப்பால்