PDA

View Full Version : குளிர்காலக் காலை!



arun karthik
09-08-2013, 05:53 AM
பொன்னொளி வீசும் கதிரவனும்,
காலையில் பூத்த புதுமலரும்,
மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!

சுகந்தப்ரீதன்
09-08-2013, 07:02 PM
குளிர்கால காலையை இளம்காளையின் பார்வையில் இதமாய் படம்பிடித்த வரிகளை வாசிக்கும்போதே ஜில்லிட்டு போகிறது.. வாசகனின் மனது..!!:icon_b:

arun karthik
07-09-2013, 07:18 PM
என் கவிதை உங்களை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி சுகந்தப்ரீதன். மனமார்ந்த நன்றிகள்...

lenram80
24-09-2013, 04:31 PM
அவள் ஜோராய் முறித்தது சோம்பல்!
இங்கே நூறாய் தெறித்தது என் இதயம்!

மும்பை நாதன்
24-09-2013, 05:32 PM
பொன்னொளி வீசும் கதிரவனும்,
காலையில் பூத்த புதுமலரும்,
மகரந்த வாச வசப்பட்ட பொன்வண்டுகளும்,
வெண்புகை பரப்பிய பனிப்பொழிவும்,
ஆனந்தக் கூத்தாடும் அணில்களும்,
ஆரவாரமாய் பாடும் பறவைகளும்,
விளக்கணைக்காமல் சுற்றும் விட்டில்களும்,
விவரம் தெரியாமல் கூவும் சேவல்களும்,
இதனிடையே என்னவள் முறித்த சோம்பலும்,
அழகாக்கி விட்டன என் குளிர் காலக் காலையை!!!

ஒன்பதாம் வரியில் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவிதையை படைத்ததற்கு பாராட்டுக்கள்.