PDA

View Full Version : காதல் சடுகுடுகுடு...

rema
08-08-2013, 05:07 AM
மின் விசிறியை அணைத்தால்
வியர்வையை முந்தி
பூக்கும் உன் நினைவுகள் !!

மின் விசிறியை ஓடவிட்டாலோ
சுகமாய் வீசும்
உன் நினைவுகள் !!

வெங்கி
08-08-2013, 06:14 AM
நன்றாக இருக்கிறது...

ஜான்
09-08-2013, 03:25 AM
கவிதை நன்று ரேமா

சுகந்தப்ரீதன்
09-08-2013, 07:09 PM
அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..!!:)

கும்பகோணத்துப்பிள்ளை
10-08-2013, 05:30 AM
மின் விசிறியை அணைத்தால்
வியர்வையை முந்தி
பூக்கும் உன் நினைவுகள் !!

மின் விசிறியை ஓடவிட்டாலோ
சுகமாய் வீசும்
உன் நினைவுகள் !!

கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

காற்று
வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

ஒரு முற்றாத பகல் பொழுது
ஓடுவேய்ந்த கூரை
கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
"ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
"அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
பார்வை தாங்காமல்
"எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!! ;)

rema
13-08-2013, 03:49 AM
நன்றாக இருக்கிறது...

நன்றி வெங்கி !

rema
13-08-2013, 03:50 AM
கவிதை நன்று ரேமா

நன்றி ஜான் !

rema
13-08-2013, 03:53 AM
அப்ப.. நினைவுகள் அனைத்தும் மின்விசிறியோட விசிறியா இருக்கும்போல..!!:)

குறும்பு பதில் நன்று சுகந்தப்ரீதன் !:) நன்றி !

rema
13-08-2013, 04:01 AM
கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

காற்று
வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

ஒரு முற்றாத பகல் பொழுது
ஓடுவேய்ந்த கூரை
கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
"ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
"அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
பார்வை தாங்காமல்
"எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!! ;)

நீள் மறுமொழிக்கு மிக்க நன்றி பிள்ளை ! என் கவிதை உங்களுக்கு பல நினைவுகளை தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி ! குறிப்பாக உங்கள் தாயின் நினைவுகளை தந்தது நெகிழ்ச்சி !!

சேலத்தில் இப்போது தான் மின்தடை சற்று குறைந்துள்ளது...
பாவம் !! மக்களை விட்டுவிடுவோமே !! :):)

lenram80
24-09-2013, 04:29 PM
பார்க்கும் இடங்களிலெல்லாம் நந்தலாலா
உந்தன் பாசமுகம் தெரியுதடா நந்தலாலா - ன்னு பாரதி மாதிரி சொல்றிங்களா?

மும்பை நாதன்
24-09-2013, 05:25 PM
மின் விசிறியை அணைத்தால்
வியர்வையை முந்தி
பூக்கும் உன் நினைவுகள் !!

மின் விசிறியை ஓடவிட்டாலோ
சுகமாய் வீசும்
உன் நினைவுகள் !!
மின்விசிறியின் ஓட்டமும்
உங்கள் எண்ண ஓட்டமும்
இனி நிற்காமல் தொடரட்டும்.

மும்பை நாதன்
24-09-2013, 05:28 PM
கோடைக்கும் குளிர்காலத்திற்குமிடையே
வீசும் தென்றல் அவள் நினைவுகள்!

காற்று
வராவிட்டால் வியர்வை முத்துக்களை முந்தும் அவள் நினைவு
வந்துவிட்டால் அலை அலையாய்த்தடவும் அவள் நினைவுகள்!

ஒரு முற்றாத பகல் பொழுது
ஓடுவேய்ந்த கூரை
கீழே வெறுந்தரையில் படுத்துக்கிடக்கும நான்
விட்டத்தில் மின்விசிறியின் விடுக் விடுக்
சட்டென்று அமைந்ததில் ஏற்பட்ட பெரும் நிசப்தம் (இனையான தமிழ்ச்சொல்லிட்டு நிரப்பிக்கொள்ளவும்)
பொட்டுப்பொட்டாய் பூக்கும் வியர்வை
அடுக்களையிலிருந்து வெளிவந்து தலைமாட்டில் உட்கார்ந்த அம்மாவின்
"ஏன்னடா திடீர்ன்னு கரன்டு கட்பன்னிட்டான்!" என்ற நிசப்த்த கிழிப்பு!
மறுபடியும் எங்களோடு அமர்ந்திருந்த ஏகாந்தமான அமைதி!
சிறிது நேரத்தில் சட்டென்று மறுபடியும் விடுக்..விடுக்.. மெல்ல விரைவாகும் மின்விசிறி
மெல்லிய அலையாய் தடவும் காற்று சுவறில் பட்டு மறுபடியும் திரும்பிய சுகம்
"அப்பாடி" என்றபடி என் தலைகோதும் விரல்களை எடுத்த அம்மா!
அண்ணாந்து அம்மாவின் முகம் பார்த்ததில் ஏற்படும் ஒரு திகைப்பான சந்தோசம்
பார்வை தாங்காமல்
"எம்பா! பசிக்குதா! எதாவது சாப்பிட்றியா!" என வினவும் பரிவு!

இத்தனையும் ஞாபகப்படுத்துகிறது உங்கள் கவிதை!

நன்றியும் வாழ்த்துக்களும் ரேமா!

சேலத்தில் அடிக்கடி மின்சாரத்தடை வர என் வேண்டுதல்கள் !!! ;)
கதையோ கவிதையோ வாசித்ததும் நேசிப்பவர்களின் நினைவலைகள் நெஞ்சில் மலர்ந்தால் படைப்பாளியின் வெற்றியையே குறிக்கும்.

கீதம்
27-09-2013, 02:48 AM
மின்விசிறியின் குடுகுடு சத்தத்தில் காதல் சடுகுடு விளையாடிய கவிமனத்துக்குப் பாராட்டுகள் ரேமா.