PDA

View Full Version : கேளுங்கள் கேளுங்கள் கதையை !!!!!!!



nandagopal.d
04-08-2013, 05:16 PM
ஜான், குட்டிப் பையன். அவனுக்குப் பசி வந்துவிட்டது. அவனுடைய அம்மா கண்ட நேரத்தில் அவன் சாப்பிடக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால் பசியால் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா கடைக்குப் போன சமயம், ஜான் சமையலறைக்குள் போனான். அங்கே ரொட்டி இருந்தது. அதை ரகசியமாக எடுத்துத் தின்றுவிட்டான்.

கடைக்குப் போய் வந்த அம்மாவுக்கு ரொட்டியை ஜான் எடுத்தது தெரிந்துவிட்டது. திருட்டுப் பழக்கம் அவனுக்கு வரக் கூடாது என்பதற்காக, ""மகனே... நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருப்பார். அதனால் திருடக் கூடாது என்றாள்''

அதற்கு ஜான், ""நான் ரொட்டியை எடுக்கும்போது கடவுள் பார்த்தாரே'' என்றான் துள்ளலுடன்.

""கடவுள் என்ன சொன்னார்?'' என்று கேட்டாள் அம்மா.

அதற்கு ஜான், ""இங்கே நம்மைத் தவிர யாருமில்லை. அதனால் ஒரு ரொட்டியை நீ எடுத்துக் கொள். இன்னொரு ரொட்டியை எடுத்து எனக்குத் தா என்று கடவுள் சொன்னார் அம்மா'' என்றான்.

அம்மா ஒன்றும் பேசவில்லை. ஜான் திருடுவதற்கு மட்டுமல்ல, பொய் சொல்லவும் கற்றுக் கொண்டானே என்று மெனமானாள்.

முரளி
05-08-2013, 05:30 AM
கதை நன்றாக இருந்தது நந்தகோபால்.

சுருக்கமாக, சொல்ல வந்ததை சொல்லும் உங்கள் திறனை வியக்கிறேன்.

இந்த இடத்தில் எனது எண்ணத்தை இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.

நான் படித்த வரை, இறைவன் என்பது எல்லா சமுதாயத்திலும் இருக்கிறது. தவறு இழைத்தால், தண்டனை உண்டு. இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வு, தவறு செய்வதை தடுக்கும் என்பதும், குற்றம் செய்வதை குறைக்கும் என்பதும் காலம் காலமாக நாம் நம்பும் ஒரு உணர்வு. ஒப்புக் கொள்ள பட்ட விஷயமும் கூட.


அதனாலேயே இறை உணர்வு குழந்தை பருவ முதல் நமக்கு புகட்டப் படுகிறது. எனவே, இந்த கதையில் , அம்மா செய்தது தவறில்லை என்பதே என் கருத்து.

இரண்டாவதாக, உண்மையில், ஜான் புத்தி சாலி. எளிதாக பொய் சொல்ல கற்றுக் கொண்டான் . அவனது சமயோசிதம், சாமார்த்தியத்தை பாராட்டியே தீர வேண்டும். Sometimes Honesty Is Not Always the Best Policy. அவனது அம்மா அவனை பாராட்டியிருக்க வேண்டும்.

சொல்லப் போனால், இன்னொரு நீதி கதை சொல்லி, குழந்தை பொய் சொல்வது தவறு அதைவிட திருடுவது தவறு என அவனை திருத்தியிருக்கலாம். திருத்தி இருக்க வேண்டும். அங்கு தான் அம்மாவின் தவறு என்பது எனது எண்ணம்.

முரளி
05-08-2013, 05:31 AM
அடடா, முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டு விட்டேனே.

இப்போது கதை கரு பொய். அதற்கு வருவோம்.

பொய் .

“பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் “சுயமரியாதையுடன்” நெருங்கிய தொடர்புடையது. ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான்” அமெரிக்காவின் உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன் !

மேலும் பல உளவியல் ஆய்வாளர் சொல்வது : “நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோம்?!”

“ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்தவேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன்மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காகவேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோம்?!”.

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே?! ( நன்றி கூகிள்...)

அதனால், ஜான் வெள்ளை பொய் (white lie) சொல்ல கற்றுக்கொண்டது பெரிய தவறில்லை. இது எல்லோருக்கும் உரிய குணம் தான். மனித இயல்பு. இது என் கருத்து..

கதையை விட, பின்னூட்டம் பெரிதாகி விட்டது. காரணம் : கருத்தை சொல்ல தூண்டிய கதை கரு.

வாழ்த்துக்கள் நந்தகோபால். அருமையான விவாதத்துக்குரிய கரு.

nandagopal.d
06-08-2013, 01:28 PM
தங்களின் கருத்தை ஏற்ற்று கொள்கிறேன் நன்றிகள்

leomohan
06-08-2013, 01:35 PM
இதை படித்ததும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒருவன் பாதிரியிடம் நான் இறைவனை துதிக்கும் போது புகைப்பிடிக்கலாமா என்று கேட்டான். பாதிரியாரும் கட்டாயம் கூடாது மகனே என்று சொல்லிவிட்டார். சில நாட்களுக்கு பிறகு ஐயா நான் புகைப்பிடிக்கும்போது இறைவனை துதிக்கலாமா என்று கேட்டான். ஓ தாராளமாக நீ எப்போது வேண்டுமானாலும் இறைவனை துதிக்கலாம் என்றார்.

சமயோசிதம் இன்று பலருக்கும் தேவையான ஒரு ஆயுதம். சிறிய கதைக்கு வாழ்த்துகள்.

ஜான்
07-08-2013, 01:35 AM
சமயோசிதம்,உளவியல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!!
பொய் என்பது ஒரு பழக்கம்!அது என்றாவது ஒருநாள் சமுதாயத்தில் நம்மைக் கீழ்த்தரமானவனாகக் காட்டிவிடும்!
பல பெற்றோர்கள் இப்படித்தான் சில பழக்கங்களை ஊக்குவித்து அப்புறம் அதற்காக வருந்துவதைக் கண்டிருக்கிறேன் !

மும்பை நாதன்
17-09-2013, 04:34 PM
இன்றைய உலகில் குழந்தைகள் பெற்றோர்களை விட புத்தி கூர்மையுடனும் சமயோசிதத்துடனும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

எனவே நம்மை நம் பெற்றோர் சொல்லி வளர்த்தது போல் இல்லாமல் இன்றைய குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் சொல்லி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெரியவர்களுக்குத்தான்.

சிந்தனையைத்தூண்டும் கதை.

பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்