PDA

View Full Version : மின்சாரக் கனவு!!!



subhashini
27-07-2013, 11:40 AM
நித்திரையில் நினைவிழந்து, அதில்
நித்தம் நித்தம் காத்திருந்து
காதல் கண்மணி அவளைக்
கனவில் கண்டு களிக்கையிலே,
மின்சாரக் கனவில் களிக்கையிலே,
மின்விசிறி சத்தம் நிறுத்த
உறக்கம் கலைந்த அவன்
உள்ளத்தில் உலராத எண்ணங்கள்..
கண்ணயர்ந்தால் கனவு வருமா???
கனவிலாவது கரண்ட்டு வருமா???

கீதம்
29-07-2013, 03:51 AM
அடப்பாவமே.... மின்வெட்டால் உறக்கம் கெட்டு, கனவுகெட்டு கலங்கிவாடும் கவிமனம் படும்பாட்டையும் கவியாக்கியமை கண்டுரசித்தேன். பாராட்டுகள் சுபாஷினி.

மின்சாரக்கனவு.... சாரமில்லாக் கனவாகிவிட்டதே...

subhashini
29-07-2013, 07:35 AM
பாராட்டுக்களுக்கு நன்றி கீதம் :)

சுகந்தப்ரீதன்
06-08-2013, 05:46 PM
வரும்.. ஆனா வராது..!!:)

எதார்த்தத்தை எழிலுடன் எடுத்தியம்பும் எள்ளல் வரிகளுக்கு வாழ்த்துக்கள்..!!

arun karthik
09-08-2013, 06:01 AM
"கண்ணயர்ந்தால் கனவு வருமா???
கனவிலாவது கரண்ட்டு வருமா???"

அட்டகாசம்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஆனா இப்பத்தான் பவர் கட் இல்லையே...

subhashini
09-08-2013, 02:43 PM
நன்றி சுகந்தப்ரீதன் :)

subhashini
09-08-2013, 02:44 PM
நன்றி அருண்... :) அது மின்சாரம் பற்றாக்குறை இருந்த காலத்தில் சில மாதங்களுக்கு முன்னர் எழுதுனதுங்க.. :P

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 02:34 AM
நித்திரையில் நினைவிழந்து, அதில்
நித்தம் நித்தம் காத்திருந்து
காதல் கண்மணி அவளைக்
கனவில் கண்டு களிக்கையிலே,
மின்சாரக் கனவில் களிக்கையிலே,
மின்விசிறி சத்தம் நிருத்த
உறக்கம் கலைந்த அவன்
உள்ளத்தில் உளராத எண்ணங்கள்..
கண்ணயர்ந்தால் கனவு வருமா???
கனவிலாவது கரண்ட்டு வருமா???

கரன்டு போனதால்
கனவும் போனதா!
இதுக்குத்தான் முழுச்சிக்கிட்டே கனவுகானனும்கிறது!

நிருத்த - நிறுத்த
உளராத - உலராத

subhashini
17-08-2013, 03:28 PM
திருத்தங்களை எடுத்துச் சொன்னதற்கு நன்றி கும்பகோணத்துப்பிள்ளை :)

சிவா.ஜி
19-08-2013, 02:00 PM
மின்சாரமில்லா நாட்களில்தான் இயற்கைக் காற்றை அனுபவிக்க முடியும்....மரத்தடி நிழலில் படுத்துறங்கும் சுகமும் கிடைக்கும். அப்படியே இயற்கைக் காற்றை சுகித்துக்கொண்டே நித்திரையில் கனவு தொடரட்டும்.


வாழ்த்துக்கள் சுபாஷினி