PDA

View Full Version : நான் பனித்துளி......................



sukhan
27-07-2013, 05:56 AM
நிறமாறி உருமாறி
வானக்கருவறை தாண்டி
ஓர் பயனம்!....
மண்ணை நோக்கி
இல்லை உன்னை நோக்கி...............
வெண்மேகத்தில் ஒளிந்த நான்,
எட்டிப்பார்க்கும் தருணம் இது.....
தொலைதூரம் தொடர்கிறேன்,
அதிகாலைப் பொழுதோடு
உதயமாகும் ஆதவன் எழா நேரம்
விரிந்த உன் இலை நோக்கி
விழி பார்க்கும் விசையோடு
உன்னுள் விழுந்த நான்
உரைந்த பனித்துளி!..........................

கீதம்
29-07-2013, 03:56 AM
உறைந்த பனித்துளியை உதயவன் எழுப்பாதிருக்கட்டும், ஏந்திய இலையது என்றும் உதிராமல் இருக்கட்டும்,

ஏகாந்தவேளையில் இன்புறும் துளியும் துளிரும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்றெல்லாம் வாழ்த்திட ஆசைதான்.

என்ன செய்வது? காலம் உறைவதில்லையே... அங்கே பார், மீண்டும் வானுக்கழைக்க வந்துவிட்டான் ஆதவன்!

அழகிய கவிதை. பாராட்டுகள் சுகன்.