PDA

View Full Version : புதிய உரை பிரதி தளம் அறிமுகம்



neechalkaran
26-07-2013, 08:14 AM
ப ல அலுவலகக் கணினிகளில் வலைப்பதிவுகள் பொதுவாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. தினமும் புதிய புதிய பிரதி தளங்கள்(Proxy site) வந்து கொண்டிருந்தாலும் பிரதி தளங்களும் அவ்வப்போது தடைசெய்யப்படுகிறது. மேலும் ப்ராக்சி தளங்களைத் திறப்பதும் நல்ல ஆரோக்கியமானதாக அலுவலகங்களில் கருதப்படுவதில்லை. இதற்கெல்லாம் கொஞ்சம் தீர்வாக கூகிள் ரீடர் என்றொரு சேவை இருந்தது. ஆனால் சமீபத்தில் கூகிளின் மூடுவிழாக்களுள் அதுவும் ஒன்றானது. இந்நிலையில் புதிதாக எந்தவித இணைய தள உரைகளைப் படிக்கும் ஒரு தளம் அறிமுகமாகியுள்ளது. இதனை உரை பிரதி தளம்(text proxy) என்றுகூட சொல்லலாம். இத்தளம் யாரையும் எத்தளத்திற்கும் மாற்றிவிடாது, அதற்குப் பதில் கொடுக்கப்படும் இணைய முகவரியை கூகிள் தானியங்கிகளின் துணையுடன் படித்து அதன் எழுத்துக்ககளை நமக்குக் காட்சிப்படுத்தும். அரசியல் ரீதியாகச் சொல்வதென்றால், அயல்நாட்டு தகவல்களை யாருக்கும் தெரியாமல் திரட்டிவரும் ஒற்றன் எனலாம். இங்கிருந்தவாறே ஏறக்குறைய அனைத்து தளங்களின் உரைகளைப் படிக்கலாம். அத்தளங்களின் விளம்பரத் தொல்லையோ, தரவிரக்கத் தொல்லையோ இருக்காது. உரைகளும், இணைப்புகளும் தவிர ஒளிப்படங்கள், காணொளிகள் மற்றும் வடிவமைப்புகள் முதலியவைப் பொதுவாகக் காட்டப்படாது. முக்கியமாக, தமிழ்த் திரட்டிகளின் முகவரியை இட்டு அதில் காட்டப்படும் வலைப்பதிவு முகவரிகளைக் கண்டு, ஒரு சொடுக்கின்(on click) மூலம் வலைப்பதிவுகளையும் படிக்கலாம். அதில் அனுகூலமான விசயம் யாதெனில், வெவ்வேறு பக்கங்களை உலாவில்(Browser) திறந்து படிப்பதைவிட இதன் மூலம் உரைகளை மட்டும் எடுத்துப் படிப்பதால் இணையப் பயன்பாடும் அதனைச் சார்ந்த கட்டணங்களும் குறையும்.<br />

http://apps.neechalkaran.com/ottran

மேலும் இதைப்போன்ற செயலிகள் பற்றி அறிய பார்க்க (http://tech.neechalkaran.com/2013/07/apps.html)